கடைசி கால எழுப்புதலுக்கு மிகவும் வேண்டிய கடிதம்
கலாத்திய சபைக்கு பவுல் எழுதிய நிருபமானது இந்த கடைசி கால எழுப்புதலுக்கு மிகவும் கட்டாயமாக ஆழ்ந்து தியானிக்க வேண்டிய ஒரு கடிதம்.
மார்டின் லூத்தர் அவர்களுக்கு இந்த கடிதம் அவருடைய சீர்திருத்த கருத்துகளுக்கு உதவியாக இருந்தது என்று சொன்னால் அதில் எந்த சந்தேகமும் கிடையாது .
மார்ட்டின் லூத்தர் இந்த கடிதத்தை படித்துதான் சீர்திருத்த கருத்துகளை மிகவும் ஆழமாக எடுத்துரைத்தார்.
இந்த கடைசி காலங்களில் சபையில் காணப்படுகின்ற மனித பாரம்பரியங்கள், சட்ட திட்டங்கள் வெளி தோற்றத்தை அடிப்படையாக கொண்டு போதிக்கின்ற உபதேசங்கள், வேதத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் போதிக்கின்ற கொள்கைகள், பெலனற்ற வெறுமையான வழிபாடுகள் இவற்றை எதிர்த்து களையக்கூடிய ஒரே நிருபம் கலாத்திய சபைக்கு பவுல் எழுதிய இந்த நிருபம் தான்.
இதைப் பற்றிய ஒரு புரிதல் சபை மேய்ப்பர்களுக்கு என்றைக்கு ஏற்படுகிறதோ அன்றைக்கு தான் அவர்கள் அதை உணர்ந்து சபைகளில் போதிக்க முடியும்.
இந்த நிருபத்தின் கருப்பொருளை உணர்ந்து அதன் அர்த்தத்தை புரிந்து போதிக்கின்ற போதகர்கள் எழும்பாத வரை சபையில் எழுப்பதல் என்று பேசுவது வெறும் கானல் நீரே.
உயிரற்ற சடலத்தை உயிர்ப்பிக்கிற வல்லமை உள்ள இந்த நிரூபத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளை உணர்ந்து போதித்தால் மட்டுமே சபையில் மாற்றம் என்பது நிச்சயமாக வரும்.
.மார்ட்டின் லூத்தருக்கு பயன்பட்ட கலாத்திய நிருபம் இன்றைய ஊழியர்களுக்கு புரியாமல் பயன்படாமல் இருப்பது வேதனைக்குரிய காரியம்
"இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?
கலாத்தியர்4:9
நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.
கலாத்தியர்4:10
நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.
கலாத்தியர்"
"அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது. "
கலாத்தியர் 4:30