யூதர்களைப் பற்றி உலகம் பார்க்க வேண்டிய பார்வை
யூதர்களைப் பற்றி உலகம் பார்க்க வேண்டிய பார்வை
யூதர்கள் தேவனால் பாதுகாக்கப்பட்ட ஒரு இனம்.
யூதர்களின் வரலாறு ஆபிரகாமில் இருந்து ஆரம்பிக்கிறது. தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர்களின் பிதா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்
ஈராயிரம் ஆண்டுகளாக அந்த ஜனங்கள் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின அந்த இடத்தில் குடியிருந்தார்கள்.
ஆனால் அவர்கள் தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படியாத காரணத்தினால் அவர்கள் தங்கள் நாட்டை விட்டு சிதறடிக்கப்பட்டார்கள்.
ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளாக நாடோடிகளாக தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாத மக்களாக தங்கள் நாட்டை இழந்து காணப்பட்டார்கள் .
ஆனாலும் அந்த ஜனத்தின் மீது தேவன் கிருபை வைத்து அவர்களுடைய முன்னோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி மீண்டுமாக தங்கள் முன்னோர்கள் குடியிருந்த அந்தப் பகுதியை அவர்கள் குடியேற வேண்டிய சூழ்நிலையை தேவன் உருவாக்கினார்.
அதன்படி இஸ்ரவேல் என்கிற தேசம் May 14, 1948, ல் உருவானது.
அன்றைய காலகட்டத்தில் யூதர்கள் மீது ஒரு அனுதாபம் ஏற்பட்டது . ஆனால் பிறகுஅவர்கள் மீது ஒரு வெறுப்புணர்வு உலக சமூகத்தில் ஏற்பட்டது.
Anti Zionism மிக தீவிரமாக வளர்ந்தது.
யூதர்களைப் போல உலக மக்களால் அதிகமாக சித்திரவதை செய்யப்பட்ட ஜனம் வேறு எந்த ஜனமும் கிடையாது.
எல்லா நாடுகளிலுமிருந்துஅவர்கள் துரத்தடிக்கப்பட்டார்கள்.
யூதர்களை இன்று உலகம் பார்க்கிற பார்வை என்பது அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக பார்க்கிறது.
ஆனால் உலகம் தெரிந்துகொள்ள வேண்டிய அநேக உண்மைகள் இருக்கிறது.
உலகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட யூதர்கள் 12 சதவீத தலைசிறந்த விஞ்ஞானிகளை கொண்டிருக்கிறார்கள்.
1901 மற்றும் 2022 க்கு இடையில் 954 தனிப்பட்ட நோபல் பரிசு பெற்றவர்களில், குறைந்தபட்சம் 212 பேர் யூதர்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு யூத பெற்றோரைக் கொண்டவர்கள், இது அனைத்து பெறுநர்களில் 22% ஆகும்.
உலகம் யூதர்களுக்கு பல வகைகளில் கடமைப்பட்டிருக்கிறது.
அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1.Lazer கருவியை கண்டுபிடித்தது யூதர்கள்தான்.
இன்றைக்கு அது மருத்துவத்துறையில் எவ்வளவு பயனுள்ள கருவியாக இருக்கிறது என்பதை உலகம் அறியும்.
2.Polio vaccination ஐகண்டுபிடித்தது அவர்கள் தான்.
இதன் மூலம் குழந்தைகள் paralysis தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
3.உலகம் ஒரு காலத்தில் பயந்து நடுங்கிய காலராவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள்யூதர்கள்தான்.:( Cholera and bubonic plague vaccinations)
4.Pacemaker என்கிற கருவியை கண்டுபிடித்தவர்கள் யூதர்கள்.
.
5.Stainless steel ஐ பிடித்தவர்கள் யூதர்கள்.இதன் மூலம் துருப்பிடிக்காத உலகத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
6அணு ஆயுதத்தை கண்டுபிடித்தவர்கள் அவர்கள்தான்.
7 Google ஐ முதலில் உருவாக்கியவர்கள் யூதர்கள்.
8.Genetic engineering காரணமாக இருந்தவர்கள் யூதர்கள்தான்.
9.தொலைபேசியை விமானத்தை கண்டுபிடித்தவர்கள் இவர்கள்தான்தான்.
10.The Ballpoint Pen ,Instant cameras, Word-processing computer , Camera phone. Video games இவைகள்அனைத்தையும்கண்டுபிடித்தவர்கள் யூதர்கள்.
Theory of relativityஉருவாக்கியவர் பிரபலமான விஞ்ஞானி Albert Einstein –ஒரு யூதன்.
கம்யூனிஸ கோட்பாடுகளை உருவாக்கியவன்Karl Marx – ஒரு யூதன்
Paul Baran – Internet He is often referred to as the "father of the Internet".இவன் ஒரு யூதன்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மருத்துவத்துறையிலும் தொழில் வளர்ச்சியிலும், எல்லா வகையான துறைகளிலும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை செலுத்தியவர்கள் யூதர்கள்.
அவர்களுடைய கண்டுபிடிப்பை உலகம் பயன்படுத்தியது என்பது உண்மைதான்.. ஆனால் இவர்களை உலகம் "ஆக்கிரமிப்பாளர்கள் 'என்கிற கருத்தை சொல்வது வருத்தமான காரியம்.
உலகத்தில் உள்ள மிகச்சிறந்த தொழில்நுட்பம் உள்ள ராணுவப்படை அமெரிக்கா, ரஷ்யா ,சீனாவிற்கு அடுத்தபடியாக யூதர்களிடம் காணப்படுகிறது.
இதுவரைக்கும் நடந்த 6 யுத்தங்களில் ஒன்றில் கூட அவர்கள் தோற்றது கிடையாது.
ஒரு இனம் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் தாங்கள் இழந்த இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்வை யூதர்களால் மட்டுமே செய்து காட்ட முடிந்தது.
இந்த காரியம் தேவனாலன்றி சாதித்திருக்க முடியாது.
ஆனாலும் இந்த இனம் இன்றைக்கும் தங்களுடைய முற்பிதாக்களின் தேவனை சரியாக அறியவில்லை.
தேவனுக்கு தூரமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த காரியம் சபை புறஜாதிகளால் நிரப்பப்படுகின்ற காலம் வரைக்கும் இப்படித்தான் இருக்கும்.
இதை ஒரு ரகசியம் என்று பவுல் சொல்லுகிறார்.
எனவே உலக சமாதானத்திற்காக ஜெபிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். யூதர்களை வெகுவாக உயர்த்தியும் பேச வேண்டாம் அவர்களை மட்டம் தட்டியும் பேச வேண்டாம் .
நமது நோக்கம் உலக சமாதானத்திற்காக ஜெபிப்பது மட்டும்தான். தேவன் இஸ்ரவேலை பொறுத்த அளவில் அவர் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உண்மையாய் இருக்கிறார். அதே வேளையில் அவர்களின் பாவங்களை, குற்றங்களை, தண்டிப்பதிலும் கடுமையாக இருக்கிறார் .நம் தேவன் சமநிலையை கடைபிடிக்கிற தேவன். தேவன்மகிமைப்படுவாராக