Two silent periods of God
Two silent periods of God
தேவன் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டே இருப்பார் ஆனால் வரலாற்றில் சில நேரங்களில் அவர் அமைதியாக காணப்பட்டார். He was silent.
தேவன் இந்த உலகத்தை படைத்த நாளிலிருந்து இரண்டு காலகட்டங்களில் அவர் அமைதியாக இருந்திருக்கிறார் .
அந்த காலகட்டங்களில் தேவனுடைய வார்த்தை மனு குலத்திற்குவெளிப்படவில்லை.
எந்த தீர்க்கதரிசியும் அந்த காலங்களில் தோன்றவில்லை.
ஒரு அமைதியான காலகட்டம்.
அப்படிப்பட்ட ஒரு காலகட்டம்தான் இஸ்ரவேல் ஜனங்கள் 400 ஆண்டு காலம் எகிப்தில் அடிமையாக இருந்த காலம்.
அந்தக் காலத்தை குறித்து வேதம் எதுவும் தெளிவாக விளக்கவில்லை.
அந்த காலத்தில் தேவனுடைய வார்த்தை இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்பட்டதாக வேதத்தில் சொல்லப்படவில்லை.
அந்த 400 கால இடைவெளியின் முடிவில் தான் தேவன் இஸ்ரவேல் ஜனங்களின் சத்தத்தை கேட்டார் என்று பார்க்க முடிகிறது.யாத்2:24
அதேபோல் மல்கியா தீர்க்கதரிசியின் காலத்திற்குப் பிறகு 400 ஆண்டுகளாக தேவனுடைய செயல்பாடுகள் பற்றி வேதத்தில் குறிப்பிடவில்லை.
அந்த காலகட்டத்தில் எந்த தீர்க்கதரிசியும் தோன்றவில்லை. கர்த்தருடைய வார்த்தையும் வெளிப்படவில்லை.
அதற்குப் பிறகு யோவான்ஸ்நானன்
பழைய ஏற்பாட்டின் இறுதி தீர்க்கதரிசியாக தோன்றினான்.
இந்த 400 கால இடைவெளியில் எந்த வேத புத்தகம் எழுதப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் சம்பவித்த காரியங்கள்
ஆனால் புதிய ஏற்பாட்டில் அப்படி அல்ல.
நம்முடைய வாழ்க்கையிலும் சில நேரங்களில் அவர்
தலையிடாமல் இருப்பது போல் தோன்றும்.
அந்த நேரங்களில் நம்முடைய பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்காதது போல் இருக்கும்.
தேவன் தூரத்தில் இருப்பது போல் ஒரு சிந்தனை ஏற்படும்.
தேவன் நம்மிடத்தில் இல்லையோ என்கிற கற்பனை உண்டாகும் ஆனால் அது அப்படி இல்லை..
புதிய ஏற்பாட்டு காலத்தில் நம்மில் வாசம் பண்ணும்பரிசுத்த ஆவியானவரும் தேவன் நமக்கு கொடுத்த வேதமும் இருக்கிறபடியால் அவைகள் நம்மை வழிநடத்தும். ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும்,வசனத்தின் கீழ்படிதலுக்கும் நம்மை ஒப்புக் கொடுக்கும் பொழுது அவர் நம்மோடு இடைபடுவார்.
இதுதான் புதிய ஏற்பாட்டிற்க்கும் பழைய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்.