Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

இயேசுவின் ஜெப வாழ்க்கை
உங்கள் சிந்தனைக்கு:

ஜெபத்திலே ஆரம்பித்து ஜெபத்திலே முடிந்த இயேசு கிறிஸ்துவின் இந்த மண்ணுலக ஆவிக்குரிய வாழ்க்கை.

நான்கு நற்செய்தி நூல்களில் மிகவும் அதிகமாக விரும்பி படிக்கப்படுகிற நற்செய்தி நூல் லூக்கா எழுதிய நூலாகும் .

அதில் பல சிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றன.

ஏனைய மூன்று நற்செய்தி நூல்களில் சொல்லப்படாத சில முக்கிய தகவல்கள், ஆவிக்குரிய உண்மைகள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந நற்செய்தி நூல் மாற்கு எழுதிய நற்செய்தி நூலை தழுவியதாக சொல்லப்பட்டாலும் லூக்கா தன்னுடைய நூலை பவுலோடு பழகிய ஆதாரங்களின் அடிப்படையில் எழுதினார்.

இந்த நூலில் உள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்று இயேசு கிறிஸ்துவை பற்றியுள்ள ஜெபக்குறிப்புகள்.

இந்த நூலில் 9 ஜெபங்களை பிதாவை நோக்கி இயேசு கிறிஸ்து ஏறெடுத்ததாக பார்க்கலாம். அதைத் தவிர
இந்த உலகத்தில் குமாரனாகிய தேவன் மனிதனாக தன்னுடைய ஆவிக்குரிய பயணத்தை ஜெபத்தோடு ஆரம்பித்து ஜெபத்தோடு முடிப்பதாக லூக்கா குறிப்பிடுகிறார். மத்தேயு மற்றும் மாற்கு இயேசு கிறிஸ்து அபிஷேகம் பெற்றதாக சொல்லப்படுகிற இடத்தில் லூக்கா சற்று விவரமாக" இயேசு ஜெபம்பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் புறாவை போல் இறங்கினார் "என்று எழுதுகிறார்.
அதாவது அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஜெபத்தோடு ஆரம்பிக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .இன்னும் சொல்லப்போனால் அவருடைய முதல் ஜெபம் கேட்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
தன்னுடைய ஆவிக்குரிய இறுதிப் பயணத்தில் பிதாவை நோக்கி "உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்று விண்ணப்பித்து தன் ஜீவனை விட்டார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
ஆம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவிக்குரிய வாழ்க்கை ஜெபத்தில் ஆரம்பித்து ஜெபத்தில் முடித்ததாக ஒரு அருமையான சத்தியத்தை தன்னுடைய நற்செய்தியில் எழுதியுள்ளார். இதுவே நம் எல்லோருக்கும் இயேசு கிறிஸ்து வைத்துள்ள ஒரு முன்மாதிரி. நம்முடைய இறுதி நேரங்கள் ஜெபத்திலே முடியும் என்றால் அதைவிட மிகப்பெரிய சிலாக்கியம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட கிருபையை நம் எல்லோருக்கும் தேவன் தருவாராக.
தேவன் மகிமைப்படுவாராக.