Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

அதேனே பட்டணமும் கொரிந்து பட்டினமும் .
பவுலின் ஊழியம் -அதேனே பட்டணமும் கொரிந்து பட்டினமும் .
பவுல் புதிய ஏற்பாட்டின் மிக பெரிய அப்போஸ்தலர்களில் ஒருவர் . சபையின் ரகசியங்களை தேவனிடத்தில் பெற்றவர்.
புதிய ஏற்பாட்டில் அனேக சபைகளை நிறுவிய தேவ மனிதன் . இப்படி அவரின் பெருமைகளை சொல்லிக்கொண்டு போகலாம். அனாலும் அவர் அதேனே(ATHENS ) பட்டினத்தில் மிக பெரிய காரியங்களை சாதிக்க முடிய வில்லை.அதேனே பட்டிணம் கிரேக்க கலாசாரத்தின் தலைநகரம். Socrates, Aristotle போன்ற தத்துவ ஞானிகளை உருவாக்கிய நகரம் . இந்த பட்டினத்தில் பவுலின் பிரசங்கத்தை கேட்டு சிலர் மட்டும் விசுவாசிகளானார்கள். இங்கு பவுல் அநேக நாட்கள் தாங்கவில்ல.
ஏன் ?அந்த நிலம் நல்ல நிலமாக இல்லாமல் இருந்திருக்கலாம்..அல்லது பவுல் அணுகிய முறை, வழக்கமான முறைகளில் இருந்து வேறுபட்ட காரணமாய் இருக்கலாம் ( compare Acts 17:1-3, 16:12-14 with Acts 17:22-30 )
இதில் மிக முக்கிய பாடத்தை நாம் கற்று கொள்ளலாம் .
நம்முடைய சுவிசேஷங்களில் தேவ வார்த்தைகளை முக்கிய படுத்த வேண்டும் .புற இன மக்களின் வேதங்களின் காரியங்களோடு வேதத்தை, இயேசுவை ஒப்பிட்டு கிறிஸ்துவை நிலை நிறுத்துகிறோம். இது . . சரியான அணுகுமுறை அல்ல. அது அநேக நேரங்களில் இந்த முறை வார்த்தையில் உள்ள வல்லமையை இழக்க செய்துவிடும் . பவுல் இதை அறிந்த பின்தான் கொரிந்து பட்டினத்தில் கூறியதை1Corin2;1-6 ல் பார்க்கலாம் .நம்முடைய நோக்கம் சிலுவையில் அறையப்பட்ட அவரைமட்டும் நாம் அறிவித்தால் போதும்