பிலேயாமின் தவறு என்றால் என்ன?
உங்கள் சிந்தனைக்கு:
பிலேயாமின் தவறு என்றால் என்ன?
The error of Balaam.
இவர்களுக்குக் கேடு விளைக! ஏனெனில் இவர்கள் காயின் சென்ற வழியில் சென்றார்கள்; கூலிக்காகப் பிலேயாமின் தவற்றைத் துணிந்து செய்தார்கள்.யூதா 1:11
இது கத்தோலிக்க
மொழிபெயர்ப்பு.
இதில் பிலேயாமின் தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது
நம்முடைய பவர் மொழிபெயர்ப்பில் இது தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்திலும்" error of Balaam" என்று தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அப்படி என்றால் பிலேயாமின் தவறு என்றால் என்ன?
தவறு என்றால் இந்த இடத்தில் தப்பு கணக்கு என்று அர்த்தம்.
இவனுடைய தப்பு கணக்கு என்னவென்றால் இஸ்ரவேல் மக்கள் புற இனத்தாரோடு கலந்து விட்டால் அவர்கள் தங்களுடைய தனித்துவத்தை இழந்து விடுவார்கள்.
அதனால்
தேவன் அவர்களை கைவிட்டு விடுவார் என்று தவறாக பிலேயாம் கணித்து விட்டான்.
இஸ்ரவேல் ஜனங்களைப் பற்றிய கடவுளின் நீண்ட காலத்திட்டத்தையோ அவர்கள் மூலமாக இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் தோன்றக்கூடிய காரியத்தையோ அவனால் அறிய முடியவில்லை .
அவன் போட்ட கணக்கெல்லாம் இஸ்ரவேல் ஜனங்களின்
பாவத்தினிமித்தம் தேவன் அவர்களை கைவிட்டு விடுவார் என்பதுதான்.
அதுமாத்திரமல்ல தேவனுடைய கட்டளைக்கு மீறி செய்த தன்னுடைய குற்றத்தையும் தேவன் கண் சாடையாக இருந்து விடுவார் என்கிற தவறான கணக்கையும் போட்டு விட்டான்.
இந்த இரண்டுமே அவன் செய்த பிழைகள்.
அவன் போட்ட கணக்கு தப்பு கணக்காக மாறிவிட்டது.
கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை தண்டித்தார்.
ஏறக்குறைய 24 ஆயிரம் பேர் வாதையினால் மடிந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் தேவன் அவர்களை கைவிடவில்லை
அதே வேளையில்
பிலேயாம் பாலாக்கிடம் பெற்ற பணத்தை அனுபவிக்க கூட முடியாமல் அவன் இஸ்ரவேல் ஜனங்களால் படுகொலை செய்யப்பட்டான்.
தன்னைக்குறித்த தேவனுடைய கணிப்பும் அவனுக்கு தவறாக போய்விட்டது.
அதுபோல தான் இன்றைக்கும் தேவனுடைய பிள்ளைகள் தவறு செய்யும்போது தேவன் அவர்களை கைவிட்டு விடுவார் என்கிற தவறான உபதேசத்தை விசுவாசிகள் மத்தியில் சாத்தான் விதைத்து கொண்டே இருக்கிறான்.
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளை தேவன் ஒருபோதும் கைவிடுவதில்லை.
அவர்களுக்கு சிட்ச்சை உண்டு.
ஆனால் அவர்களை கைவிடமாட்டார்.
தேவனை அறியாத மக்களுக்கோ தண்டனை நிச்சயம் உண்டு.
அவர்களை கடவுள் புறக்கணித்து விடுவார்.
நீதிமான் ஏழு தரம் விழுந்து போனாலும் அவர்கள் மன்னிப்பை கோரும்பொழுது அவர்களை எழுப்ப மன்னிக்க தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
இது கிருபையின் காலம்.
வேதத்தில் ஆயிரக்கணக்கான நபர்களை பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் பிலேயாமைபோல ஒரு மர்மமான நபர் வேதத்தில் யாரும் கிடையாது. (The most mysterious character in the Bible). அவனுக்கு தேவனைப் பற்றிய அறிவு இருந்தது உண்மைதான் ஆனால் அந்த அந்த அறிவு மூளைக்கு சென்றதே தவிர இதயத்திற்கு செல்லவில்லை. அவன் இஸ்ரவேலின் தேவனை உன்னதமானவர் என்றும் சர்வ வல்லவர் என்றும் அறிந்திருந்தாலும் அந்த அறிவு அவனை காப்பாற்றவில்லை.எண்ணா 24:16.
தேவனைப் பற்றிய தவறான கணிப்பு அவனை நிர்மூலமாக்கியது. நம்முடைய தேவனைப் பற்றிய அறிவு எப்பொழுதும் மூளையை சார்ந்து இருக்கக் கூடாது .அது இதயத்தை சார்ந்திருக்க வேண்டும் என்பது இவன் மூலமாக கற்றுக் கொள்ளும் பாடம்.