பிலேயாமின் முடிவு சொல்லும பாடம்.
உங்கள் சிந்தனைக்கு:
பிலேயாமின் முடிவு சொல்லும பாடம்.
பேதுரு எழுதிய இரண்டாவது நிருபம் இரண்டாவது அதிகாரம் நாம் கவனத்தோடு படிக்க வேண்டிய ஒரு அதிகாரம்.
இந்த கடைசி காலங்களில் போலியான தீர்க்கதரிசிகள்,கள்ளபோதகர்கள் சபையில் எப்படி நுழைவார்கள், அவர்களுடைய வழிமுறைகள், செயல்பாடுகள் என்ன, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு தேவன் வைத்திருக்கும் நியாயத்தீர்ப்பு என்ன? தண்டனை என்ன? என்பதை குறித்து இந்தப் பகுதி தெளிவாக விளக்குகிறது.
இதை ஒவ்வொரு விசுவாசியும் கவனத்தோடு படித்து தங்கள் ஆத்துமாக்களை காத்துக் கொண்டு அதோடு கூட தங்கள் பணத்தையும் பாதுகாத்துக் கொள்ள இது உதவும்.
கள்ளதீர்க்கதரிசிகள், கள்ளபோதகர்கள் பல வகைகளில் வெளிப்படுவார்கள்.
அவர்கள் சபைக்கு வெளியில் இருந்து வருவதில்லை.
சபையின் உள்ளேயே இருப்பார்கள்.
அவர்கள் தேவனின் திரித்துவத்தை (Trinity of God) மறுதலிப்…