இன்றைய பாலாக்குகள்
உங்கள் சிந்தனைக்கு:
இன்றைய பாலாக்குகள்.
பேதுரு தன்னுடைய இரண்டாவது நிருபத்தில் கள்ள தீர்க்கதரிசிகளையும் போதகர்ளையும் குறித்து சொல்லும் போது பணத்துக்காக, உலக மேன்மைக்காக, சுகபோகங்களுக்காக, கர்த்தர் கொடுத்த வரங்களை விலைக்கு விற்கிறவர்களை
பணத்துக்கு விலை போனவர்களை பழைய ஏற்பாட்டில் உள்ள பிலேயாமோடு ஒப்பிடுகிறார்.
அன்றைக்கு பிலேயாம் கர்த்தருடைய கட்டளைக்கு மீறி பாலாக்கின் பணத்துக்காக இஸ்ரவேல் மக்களை சோரம் போக வழிவகுத்துக் கொடுத்தான்.
இதன்படி பார்த்தால் இன்றைக்கு உள்ள சோரம் போன ஊழியக்காரர்களை பிலேயாமாக கருதுவோம் என்றால் பாலாக்குகளை யாருக்கு ஒப்பிடலாம் ?
அன்றைக்கு பாலாக்கு நேர்மையான முறையில் இஸ்ரவேல் ஜனங்களை வெற்றிகொள்ள முடியாமல் பிலேயாமை விலை பேசி இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க சொன்னான்
அது போல் இன்றைக்கு விசுவாசிகள் நேரடியாக தேவனை அணுகி தங்களுக்கு தேவையான காரியங்களை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக வரங்கள் பெற்ற ஊழியக்காரர்களை விலை பேசி தங்களுக்காக தேவனிடத்தில் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறார்கள்.
அவர்கள்மூலமாக செல்வங்களை, வெற்றியை பெற முயற்சிக்கிறார்கள்.
இந்த விலை போன ஊழியக்காரர்களும் இப்படிப்பட்ட விசுவாசிகளின் உண்மையான ஆவிக்குரிய நிலையை அறியாமல் அவர்கள் கொடுக்கிற பணத்திற்காக தேவனை சித்தத்தை அறியாமல் அவர்களுக்காக ஜெபித்து ஆசிர்வாதத்தை பெற்று தருவதாக ஏமாற்றுகிறார்கள்.
தங்களுக்கு தேவன் கொடுத்த தாலந்தை தேவனுக்கென்று பயன்படுத்தாமல் தங்களுடைய பொருளாதார ஆசீர்வாதங்களுக்காக இந்த நவீன கால பிலேயாம்கள் இயேசு கிறிஸ்துவுக்கு பதிலாக தாங்களே நடுவராக மாறி விடுகிறார்கள்.
இந்த மாதிரி வேலையாட்கள் உருவாக பாலாக்குகள் போன்ற விசுவாசிகளே காரணம் . இந்த நவீன கால பாலாக்குகள் கர்த்தருடைய வசனத்தின் படி நடந்தால், வேதத்தின் அடிப்படை சத்தியங்களை தெரிந்திருந்தால் , உண்மையாக தேவனுடைய மகிமைக்காக வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் இப்படிப்பட்ட பிலேயாம்களை ஒரு போதும் உருவாக்க மாட்டார்கள்.
எனவே நவீன கால பிலேயாம்களை குற்றம் சாட்டுவதை விடுத்து வசனத்தின் மீது கடுகளவு கூட சார்ந்திராமல், அடிப்படை சத்தியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை சிறிதளவும் இல்லாத, தேவனைத் தேட வேண்டும் ஜெபிக்க வேண்டும் என்கிற சிந்தனை அணுவ ளவும் இல்லாத இந்த பாலாக்குகள் இருக்கின்ற வரை இந்த மாதிரி பிலேயாம்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள் .
அன்றைக்கு சும்மா இருந்த பிலேயாமை அழைத்து ஐந்து தடவை பணம் கொடுத்து *இறுதியில் அவன் மடிவதற்கு காரணமான பாலாக்கு போல இன்றைக்கு நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஊழியக்காரர்களை கூட இந்த
பணத்தாசை கொண்ட விசுவாசிகள் கூட்டம் அவர்களை வழிவிலக செய்து கொண்டிருப்பது மிகவும் பரிதாபம் .