Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நம்முடைய குடியிருப்பின் எல்லைகளை தேவன் முன் குறித்திருக்கிறார்.
உங்கள் சிந்தனைக்கு:

நம்முடைய குடியிருப்பின் எல்லைகளை தேவன் முன் குறித்திருக்கிறார்.
நான் எங்கே இருக்க வேண்டும்? எது வரை இருக்கும் வேண்டும் என்பதை தேவன் மட்டுமே முடிவு செய்ய முடியும்.

கடவுள் ஆபிராமுக்கு என்று கானான் தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார்.

அந்த தேசத்தை அடைய வேண்டிய இறுதி காலகட்டத்தில் அவர்கள் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தபடியினால் கலகம் செய்த அத்தனை நபர்களும் வனாந்தரத்தில் மடியும் மட்டும் 38 ஆண்டுகள் அவர்களை தேவன் வனாந்தரத்தில் அலைக்கழித்தார்.


மோசேயை தவிர கலகம் செய்த அனைவரும் வனாந்தரத்தில் மரித்த பிறகு மறுபடியுமாக அவர்கள் கானானுக்குள் புதிய தலைமுறை பிரவேசிக்க வேண்டும்.
அப்படி அவர்கள் பிரவேசிக்கும் பொழுது அவர்கள் ஏசாவின் சந்ததிக்கு சொந்தமான சேயீர் தேசத்தையும், லோத்தின் சந்ததிக்கு சொந்தமான ஆர் என்னும் பிரதேசத்தையும் கடந்து கானானுக்கு செல்ல வேண்டும் .
அப்படி யூத ஜனங்கள் கடந்து போகும்போது அந்த லோத்தின் உறவினர்களையும் ஏசாவின் உறவினர்களையும் போருக்கு தூண்டவோ, அவர்களோடு யுத்தம் செய்யவோ கூடாது என்று தேவன் கட்டளையிட்டார்.

போரிட்டு அந்த இடங்களை யூதர்கள் கைப்பற்ற கூடாது என்பது மறைமுகமான அர்த்தம்.
அந்த இடங்களை தானே அவர்களுக்கும் கொடுத்ததாக தேவன் சொல்கிறார்.
அவர்களுக்குஅந்த 38 வருடங்கள் அவர்களை நடத்தின தான் அவர்களுக்கு போதுமானவர் என்று சொன்னார்.உபா 2:1-23

இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும்
ஆவிக்குரிய பாடங்கள் என்ன?
.1. தேவன்‌‌ ஒவ்வொருக்கென்று உலகின் நன்மைகளையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் வைத்திருக்கிறார்.
நமக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் மட்டும்தான் நாம்
பெற்றுக் கொள்ள முடியும்.
பிறருடைய ஆசீர்வாதங்களயோ மற்ற சகோதரர்களுக்கு தேவன் முன்குறித்த ஆசீர்வாதங்களையோ நாம்‌இச்சிக்க கூடாது.
அது ஒரு பேராசை அதுபோல தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய வரங்களில் திருப்தி அடைந்து அதை தேவ மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். தேவன் மற்ற சகோதரர்களுக்கு அளித்திருக்கும் பிற கவர்ச்சிக்குரிய வரங்களை நாம் பெறவில்லையே என்று ஆதங்கப்பட்டு அதை இச்சிக்க கூடாது.
தேவ நமக்கு கொடுத்திருக்கும் இம்மைக்குரிய, ஆவிக்குரிய நன்மைகளில் வரங்களில்
திருப்தி அடைய வேண்டும். அப்படி இருக்கும்போது
மற்றவர்களின் மீது பொறாமைபடாமல் இருக்கவும் நாம் திருப்தி உள்ள வாழ்க்கை வாழவும் நம்மை வழிவகுக்கும்.

2.மேலும் ஒவ்வொரு இனமும் எந்தெந்த இடங்களில் வாழ வேண்டும் என்று தேவன் தம்முடைய அனாதி தீர்மானத்தில் குறித்திருக்கிறார் அதை ஒருவராலும் மாற்றக்கூடாது.
God is supreme over all nations and
assigns their territories according to His sovereign will.W.W.Wiersbe
(Acts 17:26–28; 2 Chron. 20:6).