Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

விசுவாசத்தின் தகப்பன் ஆபிரகாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை இரண்டு காரியங்களில் நம்பினான்
உங்கள் சிந்தனைக்கு:
Abraham believed not only the Supernatural
birth of his son ( Rom 4:18-21) but also supernatural resurrection of his son.
Heb 11:17-29
விசுவாசத்தின் தகப்பன் ஆபிரகாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை இரண்டு காரியங்களில் நம்பினான்.
கர்ப்பம் செத்துப் போன நிலையிலுள்ள சாராள் மூலமாக தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று அந்த சாத்தியத்திற்கு அப்பாற்ப்பட்ட வல்லமையை நம்பினான்.
அடுத்தது
ஈசாக்கு மரித்துப் போனாலும் தேவன் அவனை உயிரோடு எழுப்ப வல்லவர் என்றும் அவன் நம்பினான்.
அப்படியே ஒரு விசுவாசியும் தன்னுடைய வாழ்க்கையில் இரண்டு வகையான இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைகளை நம்ப வேண்டும்.
ஒன்று அவனுடைய மறு பிறப்பு .
அதிசயங்களில் எல்லாம் மிகப்பெரிய அதிசயம் எதுவென்றால் ஒரு பாவி மறு பிறப்படைகிற அந்த நிகழ்ச்சிதான்.
.
இருளின் இராஜ்யத்தில் இருந்து ஒளியின் அரசாங்கத்திற்கு மாறுகின்ற அந்த மிகப்பெரிய நிகழ்வு தான் அதிசயங்களில் எல்லாம் மிகப்பெரிய அதிசயம், அற்புதம்.
தன்னுடைய மறுபிறப்பு தேவன் தன் வாழ்க்கையில் செய்த அதிசயங்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய, இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயம் என்று ஒரு விசுவாசி முதலில் நம்ப வேண்டும்.
மற்றொன்று தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை நம்ப வேண்டும். விசுவாசிக்க வேண்டும்.
அப்படி ஒருவன் நம்பும் போது தான், அவனுடைய வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமை செயல்பட முடியும்.
இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமையை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் அற்புதங்களை தேடி ஓட மாட்டான்.
அவன் வாழ்க்கையே அற்புதங்களால் நிறைந்திருக்கும்.
வாழ்க்கையை தேவனுடய சித்தத்தின்படி அமைத்துக்கொள்பவனுடைய வாழ்க்கையில் அற்புதங்கள் அவனைத் தேடி வரும்.
பாவத்தின் மீது அதிகாரம் ,உலகத்தின் மீது வெறுப்பு,
சாட்சியாய் வாழ்கின்ற காரியங்கள், ஆண்டவருடைய வருகையில் எடுத்துக் கொள்ளக்கூடிய காரியங்கள் இவற்றில் இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமையை ஒரு விசுவாசி நம்ப வேண்டும்.
தன்னுடைய மறுபிறப்பில் இயற்கைக்கு அப்பாற்பட்டவல்லமையை, அதிசயத்தை நம்பாதவன் தன்னுடைய வாழ்க்கையின் பிற ஆவிக்குரிய காரியங்களில் அப்படிப்பட்ட வல்லமையை உணர முடியாது
.
ஆபிரகாமுடைய விசுவாசபிள்ளைகள் என்றால் இந்த இரண்டு இயற்கை அப்பாற்பட்ட வல்லமைகளை நாம் நம்ப வேண்டும்.
அப்படி நம்பும்போது தான் நாம் உண்மையான ஆபிராமுடைய சந்ததியாக காணப்பட முடியும்.