பவுலை தவிர்க்க முடியாத கிறிஸ்தவம்
உங்கள் சிந்தனைக்கு:
பவுலை தவிர்க்க முடியாத கிறிஸ்தவம்.
Paul was the first and greatest Christian theologian. From the perspective of
subsequent generations, Paul is undoubtedly the first Christian theologian.A.B.Bruce
பவுலை போல புதிய ஏற்பாட்டின் ஆரம்ப கால சரித்திரத்தில் எல்லா வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் வேறு யாரும் இருக்க முடியாது.
அவருடைய சிந்தை, கல்வி, சுபாவம் இவை அனைத்துமே கிறிஸ்துவின் உபதேசத்தை கூர்மையாக்கி எந்த தவறான உபதேசத்தையும் மேற்கொள்ள பயன்பட்டது.
இதைப் பற்றி A B. Bruce என்பவர் கீழ்க்கண்டவாறு பதிவிடுகிறார்
He defined his convictions sharply,cherished them intensely, and carried them out
consistently in action. His mind, by nature and education conscientious and religious, was especially adapted to define the characteristic truths of Christianity, defend them from the errors which threatened to corrupt them, and give them currency and prevalence in the christian world.
ஆனால் இந்தப் பவுலை அடையாளம் கண்டு அந்தியோகியா சபைக்கு கொண்டுவர ஒரு பர்னபாவை தேவன் பயன்படுத்தினார்.
அதற்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஒருவேளை அது மனித தவறுகளாக இருக்கலாம் ,அல்லது தேவன் நியமித்த காலமாகவும் இருக்கலாம்.
ஆனால்
பர்னபா, பவுலின் புத்தி கூர்மையையும் அவருடைய திறமையையும் அவருடைய ,கிரேக்க மொழியின் புலமையையும்,பழைய ஏற்பாட்டு வேதங்களை குறித்து உள்ள அவருக்குரிய ஆழமான சிந்தனைகளையும், புரிதல்களையையும் புற இனங்களை பற்றிய தரிசனத்தையும் சரியாகப் புரிந்து கொண்டு அவர் இருக்க வேண்டிய இடத்தில் அவரைக் கொண்டு சேர்த்தார்.
அவர் ஒருபோதும் பவுலின் இடத்தை அடைய ஆசைப்படவில்லை. இறுதி வரை தன் அழைப்பில் பர்னபாவாகத்தான் காணப்பட்டார். இன்று சபைகளில் பவுல்கள் உருவாக பர்னபாக்கள் தேவை .
அவரவர் தங்கள் அழைப்பை உணர்ந்து ஊழியம் செய்வது தேவனுடைய இராஜ்ய விருத்திக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நாம் மற்றவரைப்போல் மாற வேண்டும் என்று நினைப்பதும் நம்முடைய அழைப்பை உயர்வாக கருதாமல் மற்றொரு அழைப்பை உயர்வாக கருதி அதை காப்பி அடிப்பதும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு எந்த பயனும் தராது.
சிறு ஊழியமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் அழைப்பில் நிலைத்திருந்து ஊழியம் செய்தால் நிலையான பலனை பரலோகத்தில் பெற்று கொள்ளலாம் .இது நிச்சயம்.
பவுல் எழதிய கடிதங்கள் வேத வார்த்தைகளாக சேர்க்கப்படாமல் இருந்திருந்தால் கிறிஸ்துவினுடைய பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் இவைகளைப் பற்றி உள்ள முழுமையான வெளிப்படுத்தல் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும்.
நாம் எந்த அளவுக்கு நிருபங்களை குறிப்பாக பவுலுடைய நிருபங்களை அதிகமாக தியானிக்கிறோமோ, அந்த அளவுக்குத்தான் புதிய ஏற்பாட்டின் முழுமையான சத்தியம் நமக்கு கிடைக்கும். நல்ல போதகர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் அவரோடு இணைந்து சத்தியங்களை கற்றுக் கொள்ளுங்கள் .
அது உங்களுக்கு பாதுகாப்பு.
Ezekiel Shanmugavel