Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஏசா ஈசாக்குக்கு கொடுத்த நிந்தனை.
உங்கள் சிந்தனைக்கு:
ஏசா ஈசாக்குக்கு கொடுத்த நிந்தனை.
ஒரு ஆவிக்குரிய தகப்பனது மிகப்பெரிய வேதனை எதுவென்றால் தான் பெற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை,(spiritual heritage) கிருபைகளை, நன்மையான காரியங்களை தான் நேசிக்கும் மகன் அதனை வெறுத்து,
அதனை விரும்பாமல் உலகத்தை நோக்கி ஓடுகின்ற காரியங்கள்தான்.
தகப்பன் எவ்வளவோ ஆவிக்குரிய வெற்றிகளை, ஆசிர்வாதங்களை பெற்றிருந்தாலும், மற்றவர்களுக்கு வழங்கியிருந்தாலும் தான் பெற்ற மகன் அந்த ஆசீர்வாதங்களை பெற முடியாமல் உலகத்தோடு கலந்து விடுகின்ற காரியம் ஒரு தகப்பனை பாதிக்கிறது போல் வேறு எதுவும் பாதிக்க முடியாது.
இப்படிப்பட்ட சோதனை தான் ஈசாக்குக்கு ஏற்பட்டது. ஈசாக்கு நேசித்த மகன் ஏசா.ஆனால் அந்த பிறப்புரிமையை அலட்சியப்படுத்தி பின்னால் தான் கொடுக்க விரும்பிய ஆசீர்வாதத்தை யாக்கோபு ஏமாற்றி பெற்றதை அறிந்தபோது ஈசாக்கு அடைந்த அந்த வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
நம்மில் யாருக்கும் அப்படிப்பட்ட வேதனை வரக்கூடாது.
நாம் ஆயிரம் ஆத்துமாக்களை சம்பாதித்து இருந்தாலும் நாம் பெற்ற மகன் அதை இழந்து நிற்பதை பார்க்கின்ற நிர்பாக்கியம் ஒருவருக்கும் ஏற்படக்கூடாது.
படிக்க ஆதி 27:2-4,33 25:32-34 வதுஅதிகாரம்.
எசேக்கியேல் சண்முகவேல்