Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

புற‌இனத்து குழந்தைகளை கொலை செய்ய தேவன் ஏன் அனுமதித்தார்?
உங்கள் சிந்தனைக்கு:
யூதர்கள் தங்கள் படையெடுப்பில் ஏன் புற இனத்து குழந்தைகளை கொலை செய்தார்கள்?
புற‌இனத்து குழந்தைகளை கொலை செய்ய தேவன் ஏன் அனுமதித்தார்?

"அவைகளையும் சங்காரம்பண்ணினோம், நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம்."
உபாகமம் 3:6

"அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த ஸ்திரீ புருஷரையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம்."
உபாகமம் 2:34

ஆண்டவர் ஏன் ஒன்றும் அறியாத பிள்ளைகளை சங்காரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.?
கடவுள் இரக்கம் இல்லாதவரா?, கருணை இல்லாதவரா? இப்படி கேள்விகளை உலக மக்கள் எழுப்பலாம்.
இதற்கு வேத பண்டிதர்கள் சொல்லுகின்ற காரணம் என்னவென்றால் சங்காரம் செய்யப்பட்ட, கொலை செய்யப்பட்ட அந்த மக்கள் மிகவும் கொடுமையான பாவத்தில் உள்ள மக்கள் .
தங்கள் பிள்ளைகளை தங்கள் தெய்வங்களுக்கு பலிகளை செலுத்துவது வழக்கமாகக் கொண்டவர்கள்.

அந்த தேசத்தில் ஆண் விபச்சாரிகளும் பெண் விபச்சாரிகளும் ஆலயத்தில் சேவை செய்வார்கள்.

விபச்சார பாவம் உச்ச கட்டத்தில் காணப்பட்டது.
கொடூர மனம் படைத்தவர்கள்தான் இந்த மக்கள். இப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டவர்கள்தான் கானான் தேசத்தில் உள்ள மக்கள்.
அது மாத்திரம் அல்ல பாவத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த சோதோம் கொமோரா
மக்களுக்கு நேர்ந்த காரியங்களை எல்லாம் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
எகிப்து தேசத்ததிற்கு தேவன் அளித்த‌‌ தண்டனையையும் அறிந்திருப்பார்கள்.
அதேபோல கானான் தேசத்தில் தேவனுக்கு பயந்து வாழ்ந்த ஆபிரகாம் யாக்கோபு போன்ற வாழ்க்கையையும் மறந்திருக்க மாட்டார்கள்.எனவே அவர்கள் போக்கு சொல்ல இடமில்லை ரோம1:18.

அது மட்டுமல்ல அந்த கொடூர மனம் படைத்த அந்த மக்களை கானான் தேசத்திலிருந்து விரட்டா விட்டால் தேவன் தெரிந்து கொண்ட யூத ஜனங்கள் அங்கே குடியிருக்க முடியாது. அந்த சந்ததி அங்கே தொடர்ந்து இருந்திருந்தால் யூத மக்கள் அவர்களோடு கலந்து யூதருடையபரிசுத்த சந்ததி கறைபட்டு போயிருக்கும் .
உலகத்தின் இரட்சகர்தோன்றுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும்.
ஆனால்
இப்பொழுது நாம் கிருபையின் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் இந்த உலகத்தை நியாயம் தீர்க்க வெவ்வேறு அளவீடுகளை வைத்திருந்தார்.
இதன் அடிப்படையிலே ‌ இந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
The knowledge of dispensational theology is a must to understand God's administration.
இதைப் பற்றி W.W.Wiersbe அவர்களின் விளக்கத்தை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொள்கிறேன் விருப்பமுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.
The nations Israel encountered east of the Jordan and in Canaan
itself was indescribably wicked. They were brutal people who sacrificed their own children to the false gods that they worshipped. Male and female prostitutes served in their temples and sexual intercourse was an important part of the Canaanite religion.

These people were not left without a witness from God in creation (Rom. 1:18ff.) as well as through the lives of Abraham, Isaac, and Jacob who had lived in Canaan. Furthermore, the news of the destruction of Sodom and Gomorrah, the plagues of Egypt, andIsrael’s deliverance through the Red Sea (Josh. 2:8–11) came to the ears of these people and bore witness that Jehovah alone is the true God.

God had been long - suffering with these wicked nations even in Abraham’s day, but now their time had run out and their judgment had come (Gen. 15:16).

If these evil civilizations had not been exterminated, Israel would have been in
constant danger of being tempted by pagan idolatry.

In fact, that’s what did happen during the period of the judges, and God had to chasten His people to bring them back to the true God. Israel had important work to do on earth in producing the written Scriptures and bringing the Savior into the world, and imitating the pagan nations would have polluted Israel and threatened God’s great plan of salvation for mankind.