Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

உடன்படிக்கைப் பெட்டியும் இன்றைய சபைகளும்


உடன்படிக்கைப் பெட்டியும் இன்றைய சபைகளும்

தேவனுடைய உடன்படிக்கை பெட்டி என்பது அவருடைய சமூகத்தை குறிக்கக்கூடிய காரியம். ஆசரிப்பு கூடாரத்திலும், சரி சாலமோன் கட்டின ஆலயத்திலும் சரி உடன்படிக்கைப் பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டது.
எரிகோவை சுற்றி வரும் பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இந்த உடன்படிக்கை பெட்டியை எடுத்துக்கொண்டு சுற்றி வந்தார்கள். சவுல் போர்க்களத்தில் உடன்படிக்கைப் பெட்டியை கொண்டு வர கட்டளையிட்டதாக பார்க்கலாம்.
ஏலியின் காலத்தில் பெலிஸ்தியர் இந்த உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து சென்றபோது தேவ மகிமை இஸ்ரவேலை விட்டு கடந்து போனதாக பார்க்கலாம்.
ஆனால்
சாலமோன் கட்டின ஆலயம் இடிக்கப்பட்ட பிறகு புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது தேவாலயத்தில் இந்த உடன்படிக்கை பெட்டி‌இல்லை. இந்த உடன்படிக்கை பெட்டி இல்லாமல் இஸ்ரவேலர் 480 ஆண்டுகள் தேவனை ஆராதித்தார்கள். இரண்டாவது ஆலயம் இடிக்கப்படும் வரை உடன்படிக்கை பெட்டி ஆலயத்தில் கொண்டுவரப்படவே இல்லை அது காணாமல் போய்விட்டது.
அதுபோல்தான் இன்று பல சபைகளில் தேவ மகிமை இல்லாமல் தேவனை ஆராதிக்கிறார்கள்.

தேவனுடைய சமூகமாகிய உடன்படிக்கை பெட்டியின்றி ஆலயங்களில் சடங்காச்சாரங்களாக ஆராதனை காணப்படுகிறது.

ஏதோ கடமைக்காக சபைக்கு வர வேண்டும், காணிக்கை செலுத்த வேண்டும், நடனத்தோடு பாட வேண்டும், செயற்கையாக உருவாக்கப்படும் தேவ சமூகத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற
நிலைதான் அநேக சபைகளில் காணப்படுகிறது.