Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

First successful man in the Bible

First successful man in the Bible

எல்லோரும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எது வெற்றி என்பது பற்றி உலகத்தினுடைய வரன்முறை வேறு.
வேதத்தின் பார்வைவேறு .

உலகத்தின் பார்வையில் காணப்படுகின்ற வெற்றி எல்லாம் வேதத்தின் பார்வையில் அநேக நேரங்களில் குப்பையாக கருதப்படும் .

வேதம் போதிக்கின்ற வெற்றியை இந்த உலகம் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆனால் குழப்பம் எங்கே வருகிறது என்றால் உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றியை வேதம் அங்கீகரிக்கின்ற வெற்றியாக கிறிஸ்தவர்கள் கருதுவதுதான்.

வெற்றியுள்ள வாழ்க்கைக்கு இரண்டு அடிப்படைத் தகுதிகள் வேண்டும்.

ஒன்று ஒரு மனிதனோடு கடவுள் இருக்க வேண்டும்

இரண்டு தேவனுடைய பரிபூரண சித்தத்தை இந்த உலகத்தில் அந்த மனிதன் நிறைவேற்ற வேண்டும்.

வேதத்தில் வெற்றியுள்ள மனிதன் என்று முதலில் குறிப்பிடப்படுவது யோசேப்பைத்தான்.
The Lord was with Joseph .He became a successful man.ESV

ஆதியாகமம் 39 ம் மட்டும் அதிகாரத்தில் மூன்று முறை "Lord was with him"என்கிற வார்த்தை வருகிறது.
.
தேவன் அவனோடு இருந்தபடியினால் அவர் செய்த காரியங்கள் எல்லாம் வாய்த்தது.
பார்வோனுக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

அடுத்தது
யோசேப்பு
தேவனுடைய நோக்கத்தை தன் வாழ்க்கையில் பரிபூரணமாக‌ நிறைவேற்றினார்.

யோசேப்பு‌ எந்த நோக்கத்திற்காக எகிப்து தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டாரோ அந்த நோக்கத்தை தேவனோடு வாழ்ந்து பரிபூரணமாக நிறைவேற்றினார்.

தேவன் நம்மோடு இருப்பது என்பது வேறு
நாம் அவரோடு இருப்பது என்பது வேறு.
நாம் அவரோடு இருப்பதாக நாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர் நம்மோடு இருப்பதை நாம் உறுதி செய்து நாம் செயல்படும்‌போதுதான் நாம் வெற்றி உள்ள வாழ்க்கை வாழ முடியும்


நாம் கற்றுக்கொள்ளக்கூடிய காரியம்,
நம்முடைய வாழ்க்கையில் எதை உறுதி செய்கிறோமோ இல்லையோ தேவன் நம்மோடு இருக்கிறாரா என்பதை மட்டும் அனுதினமும் உறுதி செய்தால் நம்மை விட வெற்றி உள்ள மனிதன்
வேறு யாரும் இருக்க முடியாது.
ஒரு மனிதனோடு கடவுள் கூட இருந்து தேவனுடைய சித்தத்தை முழுமையாக நிறைவேற்றுகிற மனிதனே வெற்றிகரமான மனிதன்