Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஒரு தலைவருக்கு இரண்டு தகுதிகளும் வேண்டும்.
உங்கள் சிந்தனைக்கு:
ஆபிரகாமும், ஈசாக்கும் தனிப்பட்ட முறையில் தேவனிடமிருந்து வாக்குறுதிகளை பெற்றிருந்தாலும் அவர்கள் பிரச்சனைகளை சமாளித்த விதம் வித்தியாசமானது.
ஆபிரகாம் பிரச்சனைகளை துரிதமாக தீர்த்து வைப்பதில் திறமைசாலியாக இருந்தான்.
He was a man of quick decision.
லோத்துடன் ஏற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி ஆகார்- இஸ்மவேல் பிரச்சனையாக இருந்தாலும் சரி, உள்ளூர் அரசர்களோடு ஏற்பட்ட போராட்டமாக இருந்தால் சரி பிரச்சனைகளை நேரடியாக சமாளித்து அது வெற்றி கண்டான்.
He will not prolong the issue.
ஆனால் அவன் மகன் ஈசாக்கு அப்படி அல்ல. அபிமெலேக்கு ஈசாக்கு ஆசீர்வதிக்கப்பட்டதை பார்த்து பொறாமைப்பட்டுஅந்த இடத்தை விட்டு புறப்பட்டு போகச் சொன்னபோது உடனே புறப்பட்டு வேறு இடம் சென்றான்.
கேராரில் உள்ள மேய்ப்பர்களோடு ஏற்பட்ட பிரச்சனையில் உடனே அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்றான். .
இவனுடைய வழிமுறை என்பது "கூடுமானால் யாவரோடும் சமாதானமாக இருக்க வேண்டும்" என்பதுதான்.
ஒரு தலைவருக்கு இந்த இரண்டு தகுதிகளும் வேண்டும்.
பிரச்சனைகளை ஊற போட்டு அதை நீர்த்துப் போக பண்ண கூடாது.
அதேநேரத்தில் யாரோடும் சமாதானமாகவும் இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.
wait and watch policy was his approach
தகப்பனும் மகனாக இருந்தாலும் ஆபிராமும் ஈசாக்கும் வெவ்வேறு ஆவிக்குரிய குணங்களை உடையவர்கள்.
பிரச்சனைகளை தலைவர்கள் ஒரே விதமாக அணுகுவார்கள் என்பது தவறான கருத்து.
அவர்களை தேவன் எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் அவர்கள் நடந்து கொள்வார்கள்.
ஆதி 26:14-22, 13:5-18,21:9