நமக்குத் தேவை பரிசுத்தத்தில் தூய்மை, இன,சாதி தூய்மை அல்ல
உங்கள் சிந்தனைக்கு :
நமக்குத் தேவை பரிசுத்தத்தில் தூய்மை, இன,சாதி தூய்மை அல்ல
ஆதியாகம் புத்தகம் 38வது அதிகாரம் உணர்த்தும் ஆவிக்குரிய சத்தியம் என்ன?
ஆதியாகம் புத்தகம் 37-வது அதிகாரம் முதல் ஐம்பதாவது அதிகாரம் வரை யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கொண்டு எழுதப்பட்டது.
ஆனால் 38 வது அதிகாரத்தில் யூதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தேவ ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். சம்பந்தமில்லாமல் இந்த ஒரு அதிகாரம் இடையில் ஏன் எழுதப்பட்டது என்பதை அறிந்தால் ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய புரிதல் நமக்கு ஏற்படும். வேதம் என்பது மீட்பின் திட்டத்தையும் மீட்பின் திட்டத்தில் நடு நாயகமாக விளங்கும் இயேசு கிறிஸ்து பற்றியும் சம்பவங்கள் அடக்கியது.
உலகத்தின் இரட்சகர் யூதா கோத்திரத்திலி ந்து தோன்றியவர்.
இந்த 38 வது அதிகாரத்தில் இந்த யூதா தடம் மாறிப் போய் கானானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதையும் அதனால் முதல் முதல் யூத கோத்திரம் புற ஜாதிகளால் கறைபட்டதையும் பார்க்கலாம் .
ஆனால் அடுத்த அதிகாரத்தில் தடம் புரளாத யோசேப்பை குறித்தும் பார்க்கலாம்.
இந்த 38 வது அதிகாரத்தினுடைய முக்கிய குறிப்பு என்னவென்றால் யூதா தாமாரினிடத்தில் பாரோசை பெற்றான் என்பது தான். அதில் யார் இந்த தாமார் என்றால் இவள் யாக்கோபினுடைய முதல் மகனான ஏர் என்பவனின் மனைவி. இவன் கொடுமையான மனிதனாக இருந்த காரணத்தினால் தேவன் அவனை சாகடித்தார் .இதனால் அவளுக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டது. அவளுக்கு வாரிசு கொடுக்கும்படியாக அடுத்த பையன் ஓனானை யூதா கேட்டுக் கொண்டான் .அது நிறைவேறாமல் போகவே மூன்றாவது மகன் கல்யாண பருவத்துக்கு வரும் வரை காத்திருக்க சொன்னான். தாமார் காலம் விரைந்து ஓடுவதை பொறுக்காமல் வேசியின் வேடம் அணிந்து தன் மாமனாரோடு உறவு கொண்டு பெற்ற குழந்தை தான் பாரேஸ்.. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் மாமனாருக்கும் மருமகளுக்கும் நடந்த தவறான உறவு முறையில் பிறந்தவன் தான் இந்த பாரேஸ்.
இந்த பாரேஸ் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறுகிறான். அதாவது இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் தவறான உறவு முறையில் பிறந்த பாரேசும் இணைக்கப்படுகிறான் என்பதுதான் நாம் அறிய வேண்டிய சத்தியம்.
Christ's lineage included this illegitimate child.
நாம் அறிய வேண்டிய சத்தியம்.
இங்கு நாம் பேசுகின்ற இனத்தூய்மை, ஜாதி தூய்மை எல்லாம் கிறிஸ்துவத்திற்கு ஏற்றதல்ல. புறஜாதிகளோடு கலக்கக்கூடாது என்பது தான் தேவனுடைய சித்தம். ஆனால் இப்படிப்பட்ட தவறான உறவு முறைகள் மூலமாகவும், ராகாப் போன்ற விலை மாந்தர் மூலமாகவும், பத்சேபாள் மூலமாகவும் உலகத்தில் பிறந்தவர்தான் உலகத்தின் மீட்பர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இந்த நிகழ்வுகளின் ஆவிக்குரிய அர்த்தத்தை உண்மையாக புரிந்து கொள்ள கொண்டால் நாம் ஜாதிப் பெருமையை ஒருக்காலும் ஒரு நிமிடம் கூட ஒரு வினாடி கூட மேன்மை பாராட்ட மாட்டோம்.
யூதர்களுக்கு வேண்டுமானால் இனத்தூய்மை முக்கியமாக இருக்கலாம். ஆனால் இரட்சகருக்கோ இரட்சகரின் பிள்ளைகளான நமக்கோ பரிசுத்தம் என்கிற தூய்மையைத் தவிர வேறு எந்த தூய்மையும் நமக்கு அவசியமும் இல்லை. முக்கியமுமல்ல.
இந்த உண்மையை கிறிஸ்தவர்கள் சரியாகப் பின்பற்றி இருந்தால், புரிந்து இருந்தால், தலைவர்கள் சரியாகப் போதித்திருந்து அதன்படி நடந்திருந்தால், கிறிஸ்துவ மதத்தில் காணப்படும் சகோதரத்துவம் இஸ்லாத்தில் காணப்படுகின்றன சமத்துவத்தை காட்டிலும் எவ்வளவு மேன்மையானது என்பதை இந்த உலகம் அறிந்திருக்கும். என்ன பரிதாபம் அது நடக்கவில்லை.
எசேக்கியேல் சண்முகவேல்