Purity in holiness is more important than purity in caste creed and sect. -
உங்கள் சிந்தனைக்கு:
Purity in holiness is more important than purity in caste creed and sect.
இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் 5 பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமார்,ராகாப்,ரூத்,பத்சேபாள் மற்றும் மரியாள்.
இதில் தாமார் கானான் தேசத்தை சேர்ந்தவள்.
ராகாப் எரிகோ பட்டணத்தை சேர்ந்தவள்.
ரூத் மோவாபிய தேசத்தை சேர்ந்தவள்.
பத்சேபாள் தாவிதோடு விபச்சாரம் செய்தவள்.
ராகப் ஒரு விலைமாது.
தாமார் தன்னை விலைமாதாக அடையாளப்படுத்தி தன் கணவனுடைய தகப்பனோடு (யூதா)உடலுறவு கொண்டவள்.
யாக்கோபின் 12 குமாரர்களில் முதலில் தடம் மாறி யூதர் அல்லாத பெண்ணோடு உறவு கொண்டவன் யூதா. ஆதியாகம புத்தகம் 38 வது அதிகாரத்தை படிக்கவும்.
பொதுவாக யூதர்கள் தங்கள் வம்ச வரலாற்றை எழுதும்போது பெண்களை குறிப்பிடுவதில்லை .
அதற்கு மாறாக மத்தேயு தைரியமாக இந்த பெண்களை இயேசுவின் வம்ச வரலாற்றில் சேர்த்திருக்கிறார்
Christ's lineage included this illegitimate child.
உலகத்தினுடைய இரட்சகர் இயேசு கிறிஸ்தவின் வம்ச வரலாற்றில் இவர்கள் மூவரும் காணப்படுகிறார்கள்.
பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற செய்தி இதன் மூலம் உறுதிப்படுகிறது. தேவகுமாரன் இந்தப் பெண்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இயேசு கிறிஸ்துவின் அருட்செய்தி ஜாதி மதம் இனம் இவைகளை தாண்டி மனிதராய் பிறந்த எல்லோரும் பாவத்தோடு பிறக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு மீட்பர் அவசியம் என்பதை இந்த வம்ச வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
இதன் மூலம்
நாம் அறிய வேண்டிய சத்தியம்.
1.இங்கு நாம் பேசுகின்ற இனத்தூய்மை, ஜாதி தூய்மை
கிறிஸ்துவத்திற்கு ஏற்றதல்ல.
2.புறஜாதிகளோடு கலக்கக்கூடாது என்பது தான் தேவனுடைய சித்தம்.
ஆனால் ராகாப்,தாமார், பத்சேபாள் போன்றவர்களின் வம்சத்தில் இருந்து இந்த உலகத்தில் பிறந்தவர்தான் உலகத்தின் மீட்பர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
3.இந்த நிகழ்வுகளின் ஆவிக்குரிய அர்த்தத்தை உண்மையாக புரிந்து கொண்டால் நாம் ஜாதிப் பெருமையை ஒருக்காலும் ஒரு நிமிடம் கூட ஒரு வினாடி கூட மேன்மை பாராட்ட மாட்டோம்.
4.யூதர்களுக்கு வேண்டுமானால் இனத்தூய்மை முக்கியமாக இருக்கலாம்.
ஆனால் இரட்சகருக்கோ இரட்சகரின் பிள்ளைகளான நமக்கோ பரிசுத்தம் என்கிற தூய்மையைத் தவிர வேறு எந்த தூய்மையும் நமக்கு அவசியமும் இல்லை.
முக்கியமும்மல்ல.
இந்த உண்மையை கிறிஸ்தவர்கள் சரியாகப் பின்பற்றி இருந்தால், புரிந்து இருந்தால், தலைவர்கள் சரியாகப் போதித்திருந்து அதன்படி நடந்திருந்தால், கிறிஸ்துவ மதத்தில் காணப்படும் சகோதரத்துவம் இஸ்லாத்தில் காணப்படுகின்றன சமத்துவத்தை காட்டிலும் எவ்வளவு மேன்மையானது என்பதை இந்த உலகம் அறிந்திருக்கும்
. என்ன பரிதாபம் அது நடக்கவில்லை
அடுத்த பதிவில் ராகப் தாமார் இவர்களை குறித்து விவரமாக பார்க்கலாம்.