Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தாமார் ராகாப் ஒரு ஒப்பீடு

தாமார் ராகாப் ஒரு ஒப்பீடு

ஆதியாகம் புத்தகம் 37-வது அதிகாரம் முதல் ஐம்பதாவது அதிகாரம் வரை யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

ஆனால் 38 வது அதிகாரத்தில் யூதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தேவ ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார்.

சம்பந்தமில்லாமல் இந்த ஒரு அதிகாரம் இடையில் ஏன் எழுதப்பட்டு இணைக்கப்பட்டது என்பதை அறிந்தால் ஒரு மிகப்பெரிய  ஆவிக்குரிய சத்தியம் நமக்கு வெளிப்படும்

. வேதம்  என்பது மீட்பின் திட்டத்தையும் மீட்பின் திட்டத்தில் நடு நாயகமாக விளங்கும் இயேசு கிறிஸ்து பற்றியும் சம்பவங்கள் அடக்கியது.

உலகத்தின் இரட்சகர் யூதா கோத்திரத்திலிருந்து தோன்றியவர்.

இந்த 38 வது அதிகாரத்தில் இந்த ‌யூதா‌‌ தடம் மாறிப் போய் கானானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதையும் அதனால் முதல் முதல் யூத கோத்திரம் புற ஜாதிகளால் கறைபட்டதையும் பார்க்கலாம் .
ஆனால் அடுத்த அதிகாரத்தில் தடம் புரளாத யோசேப்பை குறித்தும் பார்க்கலாம்.

இந்த 38 வது அதிகாரத்தினுடைய முக்கிய குறிப்பு என்னவென்றால் யூதா ‌தாமாரினிடத்தில் பாரோசை பெற்றான் என்பது தான். அதில் யார் இந்த தாமார் என்றால் இவள் யூதாவின் முதல் மகனான ஏர் என்பவனின் மனைவி. இவன் கொடுமையான மனிதனாக இருந்த காரணத்தினால் தேவன் அவனை சாகடித்தார் .இதனால் அவளுக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டது. அவளுக்கு வாரிசு  கொடுக்கும்படியாக அடுத்த பையன் ஓனானை  யூதா கேட்டுக் கொண்டான் .அது நிறைவேறாமல் போகவே மூன்றாவது மகன் கல்யாண பருவத்துக்கு  வரும் வரை காத்திருக்க சொன்னான். தாமார் காலம் விரைந்து ஓடுவதை பொறுக்காமல்ிய வேசியின் வேடம் அணிந்து தன் மாமனாரோடு உறவு கொண்டு பெற்ற குழந்தை தான்  பாரேஸ்.. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் மாமனாருக்கும் மருமகளுக்கும் நடந்த தவறான உறவு முறையில் பிறந்தவன் தான்  இந்த பாரேஸ். 
இந்த பாரேஸ் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறுகிறான். அதாவது இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் தவறான உறவு முறையில் பிறந்த பாரேசும் இணைக்கப்படுகிறான் என்பதுதான் நாம் அறிய வேண்டிய சத்தியம்.

Christ lineage included this illegitimate child.
இயேசு கிறிஸ்துவின் வரலாற்றில் முதல் முதல் புற இனத்து பெண் இணைக்கப்பட்டது இந்த இடத்தில்தான்.
அடுத்தது எரிகோபட்டினத்தை சேர்ந்த ராகப் இணைக்கப்படுகிறாள்‌.
ராகாபை பற்றி யோசுவாவின் புத்தகம் இரண்டாவது அதிகாரத்தில் நாம் பார்க்கலாம். ராகப் இஸ்ரவேலின் தேவனே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உயர்ந்தவர் என்று விசுவாசித்தாள். இரண்டு வேவுக்காரர்களை தைரியமாக காப்பாற்றி அனுப்பி வைத்தவள்.
ஆனால் இந்த தாமார் அப்படி எந்தவிதமான விசுவாசத்தையும் நம்பிக்கையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அவள் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறுகிறாள். அவளைப் பற்றி நாம் பார்க்கிற ஒரே சாட்சி யூதா அவளைப் பற்றி சொன்ன காரியம்தான்.
யூதா அவளை தன்னைவிட நீதிமான் என்று அழைக்கிறார்.
யூதாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தாலும் தாமார் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளில் முதலில் வெளிவந்த பாரேஸ் இயேசு கிறிஸ்துவின் சந்ததியில் இணைக்கப்பட்டார்
. ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல், அழைப்பை போன்றவைகள் அவருடையஇறையாண்மையை சார்ந்தது புரிந்து கொள்ளலாம்.
Matthew is sharing his faith with us. He sees God working through Tamars seduction of her father-in-law, through the collusion of Rahab the harlot with Israel's spies, through Ruth the Moabites unexpected union with Boaz the Jew, through David and Bathshebas adultery.
தேவனுடைய எந்த செயலிலும் கடவுளுடைய மறைமுகத் திட்டம் ஒன்று‌ இருக்கிறது என்பதுதான் காலம் நமக்கு சொல்லும் பாடம்.
படிக்க மத்தேயு முதல்‌ அதிகாரம், மற்றும் ஆதியாகமம் 38வது அதிகாரம்.
எசேக்கியேல் சண்முகவேல்