Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Preparation for the battle of Jericho
Preparation for the battle of Jericho .

இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானை கடந்து கானானை அடைந்த பொழுது அவர்கள் சந்திக்க வேண்டிய முதல் எதிரி பட்டணம் எரிகோ.


யோர்தானைக் கடந்த உடனே அவர்கள் உடனடியாக எரிகோவை சந்திக்கவில்லை.

ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்த பிறகுதான் அவர்கள் எரிகோ பட்டிணத்தை எதிர்கொண்டார்கள்.

இந்த இரண்டு வார கால இடைவெளியில் கர்த்தர் ஒரு மிகப்பெரிய ஆயத்தத்தை செய்தார்.

அதைப் பற்றி இப்பொழுது விவரமாக பார்க்கலாம்.

விருத்தசேதனம் என்பது தேவன் ஆபிராகாமோடும் அவனுடைய சந்ததியோடும் பண்ணின உடன்படிக்கைக்கு சரீரப்பிரகாரமான அடையாளமாகும்.( Physical sign).ஆதி 17;9-14.

விருத்தசேதனம் பெறாதவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அறுப்புண்டு போவார்கள்.
காதேஸ் பர்னேயா என்கிற இடத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய வாக்குறுதியை விசுவாசியாமல்
10 வேவுக்காரர்கள் சொன்ன அறிக்கையை நம்பி கானானுக்குப் போக விரும்பாமல் கலகம் செய்தார்கள். அதன் விளைவாக கலகம் செய்த
அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் கானானுக்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று கட்டளையிட்டார்.
அவர்களுடைய சந்ததிதான் கானானுக்கு செல்வார்கள் என்றும் ஆணையிட்டார்.
கலகம் செய்த அந்த ஜனங்கள் அனைவரும் மரிப்பதற்கு 38 ஆண்டுகள் ஆகிவிட்டது..
இந்த 38 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தலைமுறை இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானை கடந்து கானானை அடைந்தார்கள்.

ஆனால் இந்த ஜனங்களில் ஆண்கள் அனைவரும் அந்த 38 ஆண்டுகால வனாந்தர வாழ்க்கையில் விருத்தசேதனத்தை பெறவில்லை.
இந்த புதிய தலைமுறை இஸ்ரவேல் ஜனங்களில் உள்ள ஆண்கள் விருத்தசேதனத்தை பெறாமலே யோர்தானைக் கடந்து வந்து விட்டார்கள்.

எனவே இந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளையின்படி அவர்கள் விருத்தசேதனத்தை திரும்பவும் பெறுவது அவசியம். அப்பொழுதுதான் அவர்கள் உடன்படிக்கையின் பிள்ளைகளாக மாறுவார்கள்.

ஆபிரகாமோடு பண்ணின அந்த உடன்படிக்கை மறுபடியும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவேதான் கானான் தேசத்தை அடைந்த உடனே இந்த கட்டளையை தேவன் ஜனங்களுக்கு பிறப்பித்தார்.யோசு 5:2-8.


"அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார். "
யோசுவா 5:2




இந்தக் கட்டளையை நிறைவேற்றி முடிப்பதற்கு ஏறக்குறைய 10 நாட்கள் தேவைப்படும் என்று வரலாற்று ஆசரியர்கள் சொல்லுகிறார்கள்.
சாதாரணமாக செயலை கவனித்துப் பார்க்கும் பொழுது இதை"Most unmilitary acts"என்று கருதலாம்.
ஏனென்றால் இஸ்ரவேல் போர்வீரர்கள் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் எதிரி படைகள் தாக்க முன்வந்தால் அது மிகப் பெரிய தோல்வியாக மாறி இருக்கும்.
ஆனாலும் தேவன் அதை அனுமதித்தார் .
அவர் எல்லாம் அறிந்தவர்.
யுத்தம் அவருடைய யுத்தம். இரதங்களைக் கொண்டோ, குதிரைகளை கொண்டோ ஜெயித்தை கொடுப்பவர் அல்ல.‌ எனவே அடுத்து வருகின்ற மிகப்பெரிய போர்க்களங்களை இஸ்ரவேல் ஜனங்கள் வெற்றிக்கொள்ள முதலில் அந்த ஜனங்களை தன்னுடைய உடன்படிக்கையின் கீழ் கொண்டு வந்தார். அதற்கு அடையாளமாக ஒரு மிகப்பெரிய விருத்தசேதனம் என்கிற அறுவை சிகிச்சையை காலங்கடந்து அனுமதித்தார்.

விசுவாசிகளாகிய நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் முதலில் நாம் எப்பொழுதும் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். புதிய உடன்பாட்டின் பிள்ளைகளாக நாம் காணப்பட வேண்டும் . இறைவன் நமக்குள் வாழ வேண்டும். அந்த ஒரு ஆயத்தத்தை ‌கடவுள் நம் வாழ்க்கையில் அனுமதித்த பிறகு தான் நாம் ஆவிக்குரிய போர்க்களங்களை வெற்றிகொள்ள தேவன் அனுமதிப்பார்.

God's people must be prepared before they can be trusted with victory.