Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நினைவுச் சின்னங்கள் நமக்கு உணர்த்தும் பாடங்கள் என்ன?


நினைவுச் சின்னங்கள் நமக்கு உணர்த்தும் பாடங்கள் என்ன?

பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் நினைவுத்தூண்களை நாட்டும்படியாக கர்த்தர் கட்டளை பிறப்பித்தார்.

யோர்தான் நதியை கர்த்தர்
பிரித்து இஸ்ரவேல் ஜனங்கள் கடந்து சென்றதற்கு அடையாளமாக 12 கற்களை கொண்ட தூண்களை
கில்காலில் நாட்டச் சொன்னார்.யோசு 4:19

உபாகமம் புத்தகத்தில் 27வது
அதிகாரத்தில் சாபம், ஆசீர்வாதம் இவைகளுக்கு அடையாளமாக ஏபால், கெரிசீம் மலைகளில்
இரண்டு பெரிய கற்களை நாட்டச் சொன்னார்.

அதேபோல் ஆகோர் பள்ளத்தாக்கில் ஆகான் செய்த பாவத்திற்காக அவன் மேல் கல்லெறிந்து அந்த இடத்தில் பெரிய கற்குவியலை குவித்தார்கள்.இதுவும்
ஒரு நினைவுச்சின்னம் தான். யோசு 7:25,26

அதுபோல மோசே கட்டளையிட்டப்படியே ரூபன்,காத்‌ மற்றும் ‌மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் மீதமுள்ள இஸ்ரவேலர் கானான் தேசத்தை முழுவதுமாக கைப்பற்றுவதற்கு உதவி செய்த பிறகு தங்கள் இடத்திற்கு திரும்பிய வேளையில் யோர்தான் அருகே ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டினார்கள். காரணம் என்னவென்றால் தாங்கள் வாழும் இடம் கானான் தேசத்தின்‌ ஒரு பகுதியின்
அடையாளம் என்பதற்காகத்தான்.
யோசு 22:10

இந்த நினைவுத்தூண்களை ஆண்டவர் எழுப்ப சொன்னதற்கான காரணங்கள்
1.தேவன் அவர்களுக்கு செய்த அதிசயங்கள், நடத்தின வழிகள் இவைகளை மறக்காமல் இருப்பதற்காக.

2.தங்களுடைய தலைமுறைக்கு இவைகளை சொல்லி அவர்களை கர்த்தருக்குள் நிலைப்படுத்துவதற்கு.

வருகின்ற தலைமுறைகள் தங்கள் முன்னோர்களுக்கு‌ தேவன் செய்த நன்மைகளை மறக்கக்கூடாது என்பதற்காக இவைகளை நிறுவும்படி தேவன் கட்டளையிடார்.யோசு 4:20-24
நினைவுச் சின்னங்களை எழுப்புவதில் தவறில்லை.
ஆனால் அவைகள் உருவ வழிபாட்டுக்கு நேராக நம்மை நடத்தி விடக்கூடாது.

புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்.
1. தேவன் நம்முடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ,அழிக்க முடியாத செய்த அற்புதங்களையும் நடத்தின வழிகளையும் நாம் எப்பொழுதும் நினைவு சின்னங்களாக நம் உள்ளத்தில் வைத்திருக்க வேண்டும்.
2. அவற்றை நம்முடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தலைமுறைக்கும் அவர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு தேவன் செய்த நன்மைகளை தலைமுறை தலைமுறையாக மறக்க மாட்டார்கள்.

மனதில் எழுப்பப்படும் நினைவுச்சின்னங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் பொழுது அடுத்த தலைமுறை கிறிஸ்தவ உறுதிப்படும்.
எசேக்கியேல் சண்முகவேல்.