Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

"பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்" என்பதற்கு பழைய ஏற்பாட்டில் என்ன அர்த்தம்?
உங்கள் சிந்தனைக்கு:

"பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்" என்பதற்கு பழைய ஏற்பாட்டில் என்ன அர்த்தம்?

What is the meaning for consecration in the Old Testament?

யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். (Consecrate)

“நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். “
யோசுவா 3:5
இந்த இடத்தில் சொல்லப்பட்ட பரிசுத்தம்பண்ணிக் கொள்ளுங்கள் என்பதின் உண்மையான அர்த்தம் என்ன?
பலர் இதை ஆத்தூமாவில் பரிசுத்தம்பண்ணி ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிற நிகழ்வாக கருதுகிறார்கள்.

ஆனால் உண்மையான அர்த்தம் என்னவென்றால் உங்கள் சரீரத்தை பரிசுத்தம் பண்ணிக் கொண்டு அதாவது குளித்து ஆடைகளை சுத்தம் பண்ணிக் கொண்டு ஒரு புதிய ஆரம்பத்திற்கு தயாராகுங்கள் என்பது தான் இந்த இடத்தில் சொல்லப்பட்ட அர்த்தம்.


இந்த இடத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது இதுதான் உண்மையான அர்த்தம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைத்தான் Wiersbe மற்றும் Dake போன்ற‌ வேத அறிஞர்கள் விளக்குகிறார்கள்..
It was in ceremonial sense, by washing their bodies and their clothes, and abstaining from their wives; and in a moral sense.
யாக்கோபை பெத்தேலை‌ நோக்கி போகச்சொன்ன போது அவன் தன் குடும்பத்தாரை நோக்கி
"உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்"என்று கூறினார்
ஆதியாகமம் 35:2
தாவீதின் பாவத்தை நாத்தான் சுட்டி காட்டிய போது தாவீது பாவ அறிக்கையிட்டு

“தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக் கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்திலே பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்கு வந்து, போஜனம் கேட்டான். அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான்'' என‌படிக்கிறோம்
2 சாமுவேல் 12:20

மேலும் யாத்19:10ஐ அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது பரிசுத்தப்படுத்துதல் என்றால் கழுவுதல் என்று அர்த்தம்.

வேதத்தில் குளிப்பதும் புதிய ஆடைகளை உடுத்துவதும் ஒரு புதிய ஆரம்பத்திற்கு அறிகுறியாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்தக் காலகட்டங்களில் தினமும் குளிப்பது என்பது ஒரு ஆடம்பரமாக கருதப்பட்ட காலம். குளித்துவிட்டு உடைகளை மாற்றுவது என்பது சில முக்கியமான நிகழ்வுகளில் ஒரு புதிய தொடக்க நிகழ்வுகளில் நடக்கும் நிகழ்ச்சி.
ஆனால் புதிய ஏற்பாட்டில் இது ஆன்மீக சுத்திகரிப்பாக சொல்லப்படுகிறது.2கொரி7:1

எனவே யோசுவா 3:5 ன் அர்த்தம் ' நாளை நடைபெறப் போகும் அதிசயங்களுக்கு உங்கள் சரீரங்களை சுத்தப்படுத்தி புதிய ஆடைகளை உடுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான்'.

ஆனால் நாம் இதற்கு ஆவிக்குரிய அர்த்தத்தை(ஆவிக்குரிய அர்ப்பணிப்பு) கற்பித்தாலும் அது தவறல்ல.
இதைப் பற்றிய W.Wiersbe அவர்களின் விளக்கத்தை கீழே சமர்ப்பிக்கிறேன். அடுத்து சமநிலையோடு பார்க்க வேண்டுகிறேன்.


இது கத்தோலிக்க.மொழிபெயர்ப்பு

If the experience of Israel at Mount Sinai was the
pattern (Ex. 19:9–15), “sanctify yourselves” meant that
everybody bathed and changed their clothes and that
the married couples devoted themselves wholly to the
Lord (1 Cor. 7:1–6).
In the Near East, however, water was a luxury that wasn’t used too often for personal
hygiene. In our modern world we’re accustomed to
comfortable bathing facilities, but these were unknown
to most of the people in Bible times.

In the Bible the imagery of washing one’s body and
changing clothes symbolized making a new beginning
with the Lord.
Since sin is pictured as defilement (Ps.51:2, 7), God has to cleanse us before we can truly follow Him. When Jacob made a new beginning with the
Lord and returned to Bethel, he and his family washed
themselves and changed their garments (Gen. 35:1–3).
After King David confessed his sin, he bathed, changed
clothes, and worshipped the Lord (2 Sam. 12:20).
The imagery is carried over into the New Testament in 2
Corinthians 6:14—7:1; Ephesians 4:26–27, and
Colossians 3:8–14..
\