Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோவான் 1:1-5 ன் விளக்கம் பாகம் 2
உங்கள் சிந்தனைக்கு:
யோவான் 1:1-5 ன் விளக்கம் பாகம் 2
"ஆரம்பத்தில் வார்த்தையே இருந்தது. அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது. அந்த வார்த்தை இறைவனாய் இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே இறைவனுடன் இருந்தார்." யோவா1:1.
இது இலகு இலங்கை தமிழ் மொழிபெயர்ப்பு.
ஆதியிலே ( In the beginning)என்கிற வார்த்தை எதோடு சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டும் என்றால் ஆதி 1:1 உடன் இணைத்து பார்க்க வேண்டும்.
அதாவது பிதாவாகிய இறைவன் உலகத்தை படைத்த நிகழ்விலே குமாரனாகிய தேவன், வார்த்தையாகிய தேவன் உடன் இருந்தார் என்பதுதான் அர்த்தம்.
அடுத்ததாக "இருந்தது" (Was) என்கிற வார்த்தையை குறித்து தியானிக்கலாம்.
"இருந்தது "என்கிற பதம் முதல் இரண்டு வசனங்களில் நான்கு தடவை வருகிறது.
உலகம் படைக்கப்பட்ட நாளில் வார்த்தை உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படவில்லை.
It is not said "The word was made"but but the Word was"
வார்த்தை இருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது இது அவருடைய நித்தியத்தை குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
"ஆதியிலே" "இருந்தது "என்கிற இரண்டு வார்த்தைகள் மிகவும் அர்த்தம் பொருந்திய வார்த்தைகள்.
வேதத்தில் மூன்று இடங்களில் மட்டுமே இயேசு கிறிஸ்து வார்த்தையாக அடையாளப்படுத்தப்படுகிறார்.
யோவா1:1,14, 1யோவா1:1 மற்றும் வெளி19:13.
விண்ணகத்தில் குமாரன் வார்த்தையாகத்தான் குறிப்பிடப்படுகிறார்.
அடுத்தது ஏன் குமாரனை வார்த்தை என்று அடையாளப்படுத்த வேண்டும்.?
பழைய ஏற்பாட்டில்
சங்கீ33:6ல் வார்த்தை கடவுளோடு இணைத்து சொல்லப்படுகிறது.
“கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
By the word of the LORD were the heavens made; and all the host of them by the breath of his mouth”
.
அடுத்தது இயேசு கிறிஸ்து பிதாவினுடைய சிந்தையை, மனதை பிரதிபலிக்கிறவராக இருக்கிறார். அதே வேளையில் அவருடைய சிந்தையை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிற தேவனாகவும் இருக்கிறார்.
He expresses the mind of God and also reveals it to man.. எனவே அவர் வார்த்தையாக அறியப்படுகிறார் கருத்து.
இன்னொரு வகையில் சொல்ல போனால் அவர் பிதாவினுடைய சித்தத்தை பேசுகிற தேவனாகவும் அதை விளக்குகிற தேவன் ஆகவும் இருக்கிறார்.
He is speaker ,utterer and interpreter of God the Father's will.
இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்;
Hath in these last days spoken unto us by his Son,எபி1:2.
அவர் பேசுகின்ற தேவனாய் இருக்கிறபடியால் அவரை வார்த்தையாக கருத்தில் கொள்ள வேண்டும்.
தொடரும்.
எசேக்கியேல் சண்முகவேல்.
Ref1. Expository thoughts on The Gospels.By John charles Ryle
2. New testament commentary
The gospel of John.
By William Hendrickson
3. Believer's Bible commentary
By William McDonald