Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நமது சரீரங்கள் தேவன் பயன்படுத்தும் ஆயுதங்கள்

நமது சரீரங்கள் தேவன் பயன்படுத்தும் ஆயுதங்கள்
ரோம 6:13,16,19.
“உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்”
“பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக "ஒப்புக்கொடுங்கள்’
நம்முடைய சரீரங்கள் நாம் இந்த உலகில் வாழ்வதற்காக மட்டும் தேவன் நமக்கு தரவில்லை
.
தேவன் தம்முடைய திட்டத்திற்கு, சாத்தானுக்கு விரோதமாக பயன்படுத்தும் ஆயுதங்களாக தேவன் அதை வைத்திருக்கிறார். நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயம் மட்டுமல்ல அது ஒரு ஆயுத கிடங்கு . அல்லேலுயா!
நம்முடைய கண்கள், வாய், கால்கள், முழங்கால்கள், உதடுகள், கைகள் போன்ற சரீரத்தின் பகுதிகள் தேவன் பயன் படுத்தும் ஆயுதங்கள், மட்டுமல்ல, நாம் ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கபட வேண்டியவைகள்.
அவைகள் நீதிக்குரிய ஆயுதங்கள்
.
ஜெபத்திற்கு, துதிகளுக்கு வேத வாசிப்பிற்கு, , தேவ வார்த்தைகளை போதிக்க, அறிவிக்க தேவனுக்காக திட்டமிட என்று நம்முடையஒவ்வரு அங்கத்தையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது தேவன் அவைகளை ஆயுதங்களாக மாற்றுவார்.
இந்த இடத்தில் 2 கொரிந் 6:7 ல் சொல்லப்பட்ட பவுலடியாரின் வார்த்தைகளை குறிப்பிட விரும்புகிறேன் "சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,"என்ற பவுலடியாரின் வார்த்தைகள் பவுலடியார் சரீரத்தை முழுமையாக அர்ப்பணித்து அதை தேவன் பயன் படுத்த விளங்கப்பண்ணுகிறார்.
இம்மைக்காக நமக்கு கொடுக்கப்பட்ட அவையங்களை நித்திய மகிமைக்கென்று பயன்படுத்த நம்மை அர்பணிப்போம் . நம்முடைய மனக்கண்களை தேவன் திறப்பாராக.
நம்முடைய சரீர அர்ப்பணிப்பு ஆவிக்குரிய வாழ்க்கையின் முதல்படி.