யோவான் 1:1-5 (1)
உங்கள் சிந்தனைக்கு:
யோவான் 1:1-5 வேதத்தில் மிகவும் அர்த்தம் பொதிந்த, ஆழமான கருத்துக்கள் உள்ள வார்த்தைகளில் இதுவும் ஒன்று.
இந்த வார்த்தையில் உள்ள அர்த்தங்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.
யோவான் 1:1
யோவான் இந்த இடத்தில் வார்த்தை என்று சொல்லிவிட்டு அந்த வார்த்தை யாரென்றோ என்ன வார்த்தை என்றோ சொல்லவில்லை.
He does not explain at first Who and what the Word is.
வார்த்தை என்பது பொதுவாக ஒரு பேச்சைக் குறிப்பதாக இருக்கும். யோவான் இந்த இடத்தில் வார்த்தையை ஒரு பேச்சாக (Speach) இதை குறிப்பிடவில்லை.
வார்த்தையை ஒரு நபராக குறிப்பிடுகிறார்.
எனவேதான்மறை திரு. அறிவர் தே. ராஜரீகம் என்பவர் இவ்வாறாக மொழிபெயர்த்துள்ளார்.
"ஆதியிலே திருவாக்கு இருந்தார்.
அந்த வாக்கு கடவுளோடு இருந்தார்.
அந்த வாக்கு கடவுளாய் இருந்தார்."
ராஜரிகம் அவர்கள் வார்த்தையை ஒரு நபராக குறிப்பிடுகிறார்.
இந்த முதல் வார்த்தையில் குமாரனுடைய நித்தியத்தை பற்றிய காரியத்தையும்(Eternality) அவருடைய ஆள் தத்துவத்தை பற்றிய காரியத்தையும்(Personality), அவருடைய தெய்வீகத்தைப் பற்றிய காரியமும் (Deity) சொல்லப்பட்டிருக்கிறது.
"அவர் ஆதியிலே இருந்தார்" என்கிற வார்த்தை அவர் நித்திய நித்தியமாக இருக்கிறார் என்பதற்கான அர்த்தம்.
"அவர் கடவுளோடு இருந்தார்" என்கிற வார்த்தை அவருடையPersonality ஐ குறிப்பதாகும்.
"அவர் தேவனாய் அல்லது கடவுளாய் இருந்தார்"என்பது அவருடைய தெய்வீகத்தை குறிப்பதாக உள்ளது.
அது மாத்திரம் அல்ல
திருவாக்காய் வெளிப்பட்ட தேவகுமாரன் பிதா அல்ல என்று அறிந்து கொள்ளலாம்.
"Jesus Christ is a person distinct from God the Father and yet one with Him "John Charles Ryle.
மேலும் அவர் கடவுளாகவே காணப்பட்டார். Jesus Christ is very God.
தொடரும்
எசேக்கியேல் சண்முகவேல்