சாத்தானுக்கு நாம் தினசரி சொல்ல வேண்டிய செய்தி
உங்கள் சிந்தனைக்கு.
*சாத்தானுக்கு நாம் தினசரி சொல்ல வேண்டிய செய்தி*
"அவன் (எக்லோனிடம்) ஏகூத் கிட்டவந்து, 'என்னிடம் உமக்குக் கொடுக்க வேண்டிய, இறைவனிடமிருந்து பெற்ற ஒரு செய்தி இருக்கிறது' என்றான்."
(நியாயாதிபதிகள் 3:20)
*"Ehud approached him and said, 'I have a message from God for you.'"*
இந்த வார்த்தைகளை ஏகூத், எக்லோனை பட்டயத்தால் கொல்வதற்கு முன்பாகச் சொன்னான்.
*சாத்தான் எப்போதும் நம்மைப் பலவீனமான போர்வீரர்களாகக் காண்பிக்க முயல்கிறான்* . தோல்விகளை மட்டுமே சந்திக்கும் மனிதர்களாக உலகத்திற்கு நம்மை அறிமுகப்படுத்துகிறான். நம்முடைய பாடுகள், சோர்வுகள், இழப்புகள் ஆகியவற்றையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறான்.
எனவே, *அவனுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி இதுதான்:*
சாத்தானே
• நீ *உன் பெருமையினால் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டுவிட்டாய்* .
• நீ உன் மேன்மையை இழந்தவன்.
• *நீ* *அழிவிற்கென்று முன்குறிக்கப்பட்டவன்* .
• *தேவகுமாரனாகிய கிறிஸ்து கல்வாரியில் உன்னை வெற்றிகொண்டுவிட்டார்* .
• நீ தோற்கடிக்கப்பட்டவன். *உன்னுடைய நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன* .
• *உனக்கென்று ஒரு நரகம் ஆயத்தமாக இருக்கிறது.*
• *உன்னால் இரத்தசாட்சிகளாக மரித்த தேவப் பிள்ளைகளின் குரல் உனக்கு எதிராக பரலோகத்தில்* *ஒலித்துக்கொண்டிருக்கிறது* .
• தேவனால் முன்குறிக்கப்பட்டவர்களை உன்னால் பறிக்க முடியாது.
*நான் உலகத் தோற்றத்திற்கு முன்பே* *தேவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவன்* ; *கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தில் ஒரு உறுப்பாக இணைக்கப்பட்டிருக்கிறேன்*
.
தேவன் எனக்கு அளித்த இரட்சிப்பு நித்தியமானது; அது மாறாதது, அழியாதது. அவர் என்னை வழுவாதபடி காத்துக்கொள்ள வல்லவர்.
தேவன் என் மீது வைத்திருக்கும் அன்பிலிருந்து என்னை நீ பிரிக்க முடியாது.
" *You are a defeated foe.*
*You cannot defeat God's purpose in my life."*
தோற்கடிக்கப்பட்ட நீ, தேவன் என் வாழ்க்கைக்காக வைத்திருக்கும் நோக்கத்தைத் தோற்கடிக்க முடியாது.
*நான் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு உறுப்பாக இணைக்கப்பட்டுள்ளேன்* .
*என்னுடைய ஊழியத்தையும் பணியையும் உன்னால் தடுக்க* *முடியாது*
.
இறைவன் எனக்கென்று பரலோகத்தில் ஒரு இடத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
*நித்தியத்தில் நீ நரகத்தில் இருப்பாய்;* ஆனால் நான் தேவனோடு மகிமையிலும் மகிழ்ச்சியிலும் என்றென்றும் வாழ்வேன்.
இந்த பூமியில் நான் வாழும் கொஞ்ச காலத்தில், தேவன் என் மீது வைத்திருக்கும் அநாதி திட்டத்தை உன்னால் தடுக்க முடியாது. நான் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவன். ஆகையால் எனக்கு ஆவிக்குரிய மரணம் இனி இல்லை. நான் தேவகுமாரனுடைய பிள்ளையாக, பிதாவின் குடும்பத்தில் என்றென்றும் காணப்படுவேன். ஆனால் உன்னுடைய முடிவு அப்படியல்ல.
இவ்வாறு நாம் சாத்தானை நோக்கி தேவனுடைய சத்தியங்களை அறிவிக்கக்கூடிய செய்திகள் அநேகம் உள்ளன. இந்த உண்மைகளை தினமும் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் விசுவாசத்தோடு அறிக்கையிட்டு வாருங்கள். அப்போது நமக்குள் புதிய வல்லமை, ஆவிக்குரிய வெளிப்படுத்தல், சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி பெருகும்.
*அன்றைய தினம் ஏகூத் எக்லோனை பட்டயத்தால் குத்தினதுபோல, நாமும் தினமும் தேவனுடைய* *வசனமாகிய ஆவியின் பட்டயத்தால் (எபேசியர் 6:17) சாத்தானுடைய பொய்களையும்* *வஞ்சகங்களையும் எதிர்த்து உறுதியாக நிற்போம்* .