Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*யோபுவின் புத்தகம் – வேத பாடம் 46*
*உங்கள் சிந்தனைக்கு!*

*யோபுவின் புத்தகம் – வேத பாடம் 46*

*யோபுவின் நண்பர்களுடைய கடவுளைப் பற்றிய தவறான புரிதல்*

மிகுந்த உபத்திரவத்தில் சொத்துக்களையும், குடும்ப உறவுகளையும் இழந்து, சரீரத்தாலும் பாதிக்கப்பட்ட யோபுவுக்கு ஆறுதல் கூற வந்த நண்பர்கள் இரண்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்தார்கள்.
1. *யோபுவின் பாடுகளுக்கு அவனுடைய பாவம்தான் காரணம் என்றும்,* *அவன் தன் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பினால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம் என்றும் தீர்மானித்து, அவனுக்கு தீர்ப்பு* *வழங்கிவிட்டார்கள்* .
2. *கடவுள் பாவிகளுக்குத் தண்டனை அளிக்கிறார்; நீதிமான்களை* *ஆசீர்வதிக்கிறார்; எல்லாப் பாடுகளுக்கும் பாவமே* *காரணம்* ; *நீதிமானாக வாழ்கிறவன் துன்பப்படுவதில்லை என்ற தவறான* *கருத்தைக் கொண்டிருந்தார்கள்* .
*இந்த இரண்டு கருத்துகளையும் கடவுள் அங்கீகரிக்கவில்லை. இந்தக் கருத்துகள் யோபுவுக்கு எந்த ஆறுதலையும் கொடுக்கவில்லை. மாறாக, அவனுக்கு சோர்வையும் எரிச்சலையும் ஏற்படுத்தின.*
எனவே, இறுதியில் கடவுள் யோபுவின் நண்பர்களைக் குறித்து கூறிய வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை:
“கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்கள்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது. *என் தாசனாகிய யோபு பேசினதுபோல, நீங்கள் என்னைக்குறித்து* *நிதானமாய்ப் பேசவில்லை.”*

யோபு 42:7
அவர்கள் கடவுளைப் பற்றியும், கடவுளுடைய செயல்களைப் பற்றியும் தவறாகப் பேசியதால், அவர்களுடைய புத்தியீனத்திற்குத் தக்கதாக அவர்களை நடத்தாமல் இருக்கும்படி யோபுவின் முகத்தைப் பார்த்து மன்றாடுமாறு கடவுள் கூறினார். யோபுவின் மன்றாட்டு ஜெபத்தைக் கேட்டு அவர்களை மன்னிப்பதாகவும் கூறினார்.
இறுதியில், யோபு தன் நண்பர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் மன்றாடுகிறவராக காணப்படுகிறார். யோபுவின் விண்ணப்பத்தைக் கடவுள் ஏற்றுக்கொண்டு, அவருடைய நண்பர்களை மன்னித்தார்.
இதன் மூலம் வேதம் நமக்கு உணர்த்தும் பாடங்கள்
*விசுவாசிகள் மத்தியில் ஆலோசனை ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் கற்ற அறிவின் அடிப்படையில் மட்டும் ஆலோசனை கூறாமல்* , *கடவுளைப் பற்றி நன்கு அறிந்து, அவருடைய குணங்களையும் பண்புகளையும்* *புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆலோசனை வழங்க* *வேண்டும்* .
கடவுளைப் பற்றிய சமநிலையான பார்வை நமக்கு வேண்டும்.
கிறிஸ்தவ ஆலோசனை ஊழியத்தில் ஈடுபடுபவர்கள் வேதத்தை நன்கு அறிந்தவர்களாகவும், கடவுளுடைய குணநலன்களை சரியாகப் புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே யோபுவின் புத்தகம் நமக்கு உணர்த்தும் மிக உன்னதமான சத்தியங்களில் ஒன்றாகும்.
ஒரு விசுவாசியின் ஆவிக்குரிய வாழ்க்கையில் பல அதிகாரங்கள் காணப்படலாம். சில அதிகாரங்களை அவனே தனக்குத்தானே எழுதிக்கொள்வான். ஆனால் இறுதி அதிகாரத்தை எழுதுபவர் கடவுள் மட்டுமே.
*God will write the last chapter of every believer.*

யோபுவின் புத்தகம் நமக்கு உணர்த்தும் இன்னொரு பாடம் என்னவென்றால், பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் மத்தியில் நாம் அநேக நேரங்களில் பொறுமையை இழந்துவிடுகிறோம். எனவே, பொறுமையோடு பாடுகளைச் சகித்துக்கொள்ளக்கூடிய கிருபையை நாம் கடவுளிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பாடுகளின் மத்தியில் பொறுமையாக இருப்பது கடினம்தான். அந்தக் கிருபையைத்தான் நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
இத்துடன் யோபுவின் புத்தகத்தைப் பற்றிய என்னுடைய வேத தியானங்கள் முடிகின்றன.
கடவுள் மகிமைப்படுவாராக!
உங்களுடைய பணியில்,