இன்னும் எவ்வளவு காலம் திரைச்சீலைக்குப் பின்னால் நிற்பீர்கள்?*
*உங்கள் சிந்தனைக்கு*
*இன்னும் எவ்வளவு காலம் திரைச்சீலைக்குப் பின்னால் நிற்பீர்கள்?*
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் தமது ஜீவனை விட்ட அந்தக் கணமே, தாமதமின்றி நமக்காகப் பிதாவாகிய தேவன் செய்த மிகப்பெரிய காரியம் ஒன்று உண்டு. *தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக நடுவில் இரண்டாகக் கிழிந்தது* (மத். 27:51; மாற். 15:38; லூக். 23:45).
இதன் மூலம், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிரிவின் அடையாளம் நீக்கப்பட்டு, *கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனுடைய சந்நிதியில் நேரடியாக வரக்கூடிய உரிமையும்* *வாய்ப்பும்* *வழங்கப்பட்டன.*
இந்த நிகழ்வை மூன்று சுவிசேஷங்களிலும் காணலாம்.
மறுபடியும் பிறந்த உடனேயே, தேவன் இந்த மிகப்பெரிய ஆசீர்வாதத்தை நமக்கு அளித்துவிட்டார். நமக்கும் தேவனுக்கும் இடையில் மனித மத்தியஸ்தர் ஒருவர் அவசியமில்லை.
*NO HUMAN MIDDLEMAN IS REQUIRED* .
*எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தத் தேவையுடனும் நாம் நாமே பிதாவிடம்* *வரலாம்* . *இது கிறிஸ்துவில் நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆவிக்குரிய* *privilege* —தேவனுடைய சந்நிதியை நேரடியாக அணுகும் உரிமை.
ஆனால், இந்த உரிமையை நாம் சில சமயங்களில் இடைத்தரகர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் தவறான போதகர்களுக்கும் அடிமைகளாகிவிடுகிறோம்.
ஆண்டவரையே சார்ந்து, விடுதலையான மக்களாக வாழ்வதற்குப் பதிலாக, மனிதர்களைச் சார்ந்து வாழும் ஆவிக்குரிய அடிமைத்தனத்திற்குள் நம்மை நாமே கொண்டு செல்கிறோம்.
நம்முடைய பாரங்களை நம்மைப் போல வேறு யாராலும் தேவனிடம் எடுத்துச் செல்ல முடியாது.
நம்முடைய உள்ளத்தின் ஆழமான தேவைகளையும், கண்ணீரையும், போராட்டங்களையும் நாம் தனிப்பட்ட முறையில் தேவனிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதை நாம் உண்மையாகப் புரிந்துகொண்டால், நம்முடைய பிரச்சினைகளையும் போராட்டங்களையும் விசுவாசத்தோடு எதிர்கொள்ள முடியும்.
எனவே, இடைத்தரகர்களைச் சார்ந்து நம்முடைய ஆவிக்குரிய பெலத்தை இழந்துவிட வேண்டாம்.
நாம் ஜெபிக்காமல், எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருப்பது ஆரோக்கியமான ஆவிக்குரிய அனுபவம் அல்ல. நம்முடைய தனிப்பட்ட தேவைகளுக்காக நாமே தேவனைத் தேடி ஜெபிக்க வேண்டும் என்பதே ஆண்டவருடைய விருப்பம்.
*பொதுவான ஊழியக் காரியங்களுக்காகவும், சபையின் தேவைகளுக்காகவும், ஒருவருக்கொருவர் ஜெப உதவி கேட்பது வேறு.*
ஆனால், நம்முடைய தனிப்பட்ட தேவைகளுக்காக நாம் ஜெபிக்காமல், எப்போதும் பிறருடைய ஜெபத்தையே சார்ந்திருப்பது வேறு.
இன்னும் எவ்வளவு காலம் திரைச்சீலைக்குப் பின்னால் நிற்போம்?
*அன்பான சகோதரரே, கிழிந்துபோன திரைச்சீலையைத் தள்ளிவிட்டு, பிதாவிடம் நேரடியாக* *வாருங்கள்* .
பிதா உங்களை அழைக்கிறார்!
ஆசாரியத்துவம் மாறிவிட்ட பிறகும், பழைய முறைகளையும் பயனற்ற மதச் சடங்குகளையும் சார்ந்து ஏன் இன்னும் நிற்க வேண்டும்?
*மற்றவர்களின் ஜெபத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தது போதும்!*
*நேரடியாக உறவாட பிதா உங்களை அழைக்கிறார்* .
“ *We have direct, equal and unlimited access to the throne of God.”*
கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய சந்நிதியை அணுகும் இந்த மகத்தான உரிமையை நாம் மீண்டும் உணர்ந்து, அனுபவித்து, பயன்படுத்திக்கொள்வோம்.
இழந்துவிட்டதாக நினைத்த உரிமையை மீண்டும் உணர்ந்து கொள்வோம்!
திரைச்சீலை கிழிந்துவிட்டது.
வழி திறந்துவிட்டது.
பிதா அழைக்கிறார்.
இனி பின்னால் நிற்க வேண்டாம்—நேரடியாக அவரிடம் வாருங்கள்.
தியானிக்க வேண்டிய வேதப் பகுதிகள்
லூக்கா 23:45; மத்தேயு 27:51; மாற்கு 15:38; லேவியராகமம் 9:7; 16:2; எபிரெயர் 9:6–7; 12:18–24