உங்கள் சிந்தனைக்கு!* *யோபுவின் புத்தகம் — வேத பாடம் 36*
*உங்கள் சிந்தனைக்கு!*
*யோபுவின் புத்தகம் — வேத பாடம் 36*
யோபுவை நோக்கி கடவுள் எழுப்பிய 77 கேள்விகள் — அவற்றின் சிறப்பான முக்கியத்துவம்
கடந்த பதிவில், யோபுவை நோக்கி கடவுள் எழுப்பிய 77 கேள்விகளைக் குறித்து பார்த்தோம். *இனி வரும் பதிவுகளில், அந்தக் கேள்விகளின் சிறப்பான முக்கியத்துவம்* *குறித்து தியானிக்கலாம்.*
கடவுள் கேட்ட முதல் கேள்வி
“நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.”
யோபு 38:4
யோபு 38:4–10 வரை உள்ள கேள்விகள், பூமியினுடைய படைப்பைப் பற்றி கடவுள் கேட்ட கேள்விகள்.
இந்தக் கேள்விகள் *ஒரு உண்மையை நமக்குப் புலப்படுத்துகின்றன. படைப்பின் தொடக்கத்தில்* *மனிதன் அங்கே இல்லை; ஆனால் தேவன் அங்கே இருந்தார்* . *அந்த ஆரம்ப நிகழ்வுகளை எந்த மனிதனும் நேரில் பார்த்ததில்லை* .
பூமி படைக்கப்பட்டபோது யோபு அங்கே இல்லை. வேறு எந்த மனிதனும் அங்கே இல்லை. எனவே, அந்த நிகழ்வுகளை மனிதன் நேரில் பார்த்து, ஆய்வு செய்து, பரிசோதனை செய்து முழுமையாக விளக்க முடியாது.
“கடவுளின் இந்த உரையாடலில் மட்டுமே இயற்கையின் செயல்முறைகள் இவ்வளவு விரிவாகவும், மனிதனுக்கு அவற்றின் மர்மங்கள் இவ்வளவு அழகாகவும் சித்தரிக்கப்படுகின்றன. *இது ஆதியாகமம் முதல் அதிகாரத்திற்கான* *ஆவியால் அருளப்பட்ட விளக்கவுரையாகும்* ” என்று Smith, இன்று ஒரு வேத அறிஞர் கூறுகிறார்.
“ *It is an inspired commentary on the first chapter of Genesis.”*
படைப்பின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அந்தப் படைத்தவரைப் பற்றிய முழுமையான சத்தியங்களைத் தெரிந்து கொண்டு, கடவுளிடமிருந்து ஒரு முழுமையான வெளிப்பாட்டைப் பெற்றுள்ள மனிதன் மட்டுமே விளக்க முடியும்.
மற்றபடி, செயற்கை அறிவின் மூலமாகவும், மனித அறிவின் மூலமாகவும் இயற்கையின் படைப்பைக் குறித்து உள்ள விளக்கங்கள் காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும். உண்மையான முடிவுக்கு அது வர முடியாது.
கடலைப் பற்றிய கேள்விகள்
*அடுத்ததாக, கடலைப் பற்றி கடவுள் கேள்விகள் கேட்கிறார்.*
கடலைப் பற்றி தேவன் யோபுவிடம் இவ்வாறு கேட்டார்:
“நீ சமுத்திரத்தின் ஊற்றுகளுக்குள் பிரவேசித்தாயோ? அல்லது ஆழத்தின் மறைவிடங்களைத் தேடி நடந்தாயோ?”
யோபு 38:16
இங்கு “ஆழம்” என்பதற்கு ஆங்கிலத்தில் “ஆழ்கடலின் மறைவிடங்கள்” என்று பொருள் கொள்ளலாம்.
கடலின் அடிப்பகுதி பொதுவாக மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது:
கண்டத் திட்டு (Continental Shelf)
கண்டச் சரிவு (Continental Slope)
கடலின் ஆழமான அடிப்பகுதி (Ocean Floor)
கடலின் அடிப்பகுதியில் ஏராளமான மலைகள், மேடுகள், பாறைத் தொடர்கள், சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ளன.
சில கடலுக்கடிப் பள்ளத்தாக்குகள், அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேன்யன் போன்ற மிகப் பெரிய பள்ளத்தாக்குகளைப் போலவே உள்ளன.
கடலின் கரையிலிருந்து கண்டத் திட்டு பொதுவாக சுமார் 30 மைல்கள் வரை நீளமாக இருக்கும். சில இடங்களில் அது கடற்கரையிலிருந்து பல நூறு மைல்கள் தூரம் வரை கூட நீள்கிறது.
கடலுக்குள் இருக்கும் சில மலைகள் எவரெஸ்ட் மலையைவிடவும் உயரமானவை. எவரெஸ்ட் மலையின் உயரம் சுமார் 29,000 அடி.
கடல்களுக்குள் மிகப் பெரிய மலைத்தொடர்களும் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் (Mid-Atlantic Ridge) ஆகும்.
கடலின் ஆழமும் மிகவும் ஆச்சரியமானது.
தற்போது அறியப்பட்டுள்ள கடலின் மிக ஆழமான பகுதி, மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழி (Mariana Trench) ஆகும். அதன் ஆழம் சுமார் 36,198 அடி.
இவ்வாறு, அறிவியல் ஆராய்ச்சிகள் கடலுக்கடியில் மிகப்பெரிய பள்ளங்கள், ஆழமான பகுதிகள், மலைத்தொடர்கள் போன்றவை இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
இருந்தாலும், *கடல்களைப் பற்றிய நமது அறிவு இன்னும் மிகவும் குறைவாகவே* *உள்ளது* .
1969-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், உலகக் *கடலின் அடிப்பகுதியில் 5 சதவீதத்திற்கும் குறைவான பகுதியே* *வரைபடமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது என்று கூறப்பட்டது. கடல்களைப்* *பற்றிய நமது அறிவு எவ்வளவு குறைவாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.*
படைத்தவருக்குத்தான் தான் எவ்வாறு படைத்தோம் என்பதைப் பற்றிய புரிதல் இருக்கும். அதன் அடிப்படையில்தான் கடவுள் சமுத்திரத்தின் ஆழத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்.
யோபுவுடன் பேசி *3000 ஆண்டுகள் கழிந்த பிறகும், இன்றைக்கும் கடலின் ஆழத்தைப்* *பற்றியுள்ள கண்டுபிடிப்புகள் மிகக் குறைவு என்பதுதான் நாம் இங்கே* அறிந்து கொள்ள வேண்டிய சத்தியம்.
அப்படி என்றால், *இந்த வார்த்தைகள் எவ்வளவு அறிவுபூர்வமானவைகள், விஞ்ஞானபூர்வமானவை என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.*
அடுத்த பதிவுகளில், கடவுள் எழுப்பிய கேள்விகளைச் சார்ந்த இன்னும் பல சத்தியங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்தத் தகவல்கள் அனைத்தும்
*“God's Matchless Question” by Warren Apologetics Center*
என்கிற புத்தகத்தைத் தழுவியது.
கடவுளுடைய பணியில்,