Divisions in the life of Jacob
உங்கள் சிந்தனைக்கு:
Divisions in the life of Jacob
வேதத்தில் பிரிவினைகளால் (Divisions)மிகவும் பாதிக்கப்பட்ட முதல் மனிதன் யார் என்றால் யாக்கோபுதான்.
பிறக்கும்போதே மிகப்பெரிய ஆளுகை அழைப்போடு தெரிந்து கொள்ளப்பட்டவன்.
ஆனால் தன்னுடைய தாய் தகப்பன் இடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையால் தகப்பனின் ஆசிர்வாதத்தை தாயின் தவறான வழிமுறையின் மூலமாகப் பெற முற்பட்டபோது அதன் விளைவாக வீட்டை விட்டு வெளியேறித் தனது மாமா வீட்டுக்குச் சென்று 20 வருடங்கள் கழித்த பிறகும் கூடத் தன் தாயைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.இது பிரிவினையால் யாக்கோபுக்கு வந்த முதல் சோதனை.
மேலும் அதன் மூலமாக ஏசாவுக்கும், யாக்கோபுக்கும் ஏற்பட்ட சகோதர பிரிவினை.
யாக்கோபு அதிகமாக நேசித்தது ராகேலைதான்.
ஆனால் அந்த முயற்சியில்அவனுக்கு கிடைத்த இரண்டு மனைவிகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒற்றுமையின்மை.(Division)
யாக்கோபின் அன்பை பெற இரண்டு மனைவிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரிவினை.
தான் நேசித்த ராகேல் மரித்தபிறகு அவளுடைய மூத்த குமாரனை நேசித்த காரணத்தினால் மற்ற பத்து குமாரர்களுக்கும் யோசேப்புக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவினை
.
இது போக ஆதியாகமம் 32 1-3 ல் சொல்லப்பட்டபடி தேவதூதர்களுக்கு ஒரு முகாம் அமைத்தான்.பிறகு தன் குடும்பத்திற்கென்று தனியாக முகாம் அமைத்தான்.
இந்த இரண்டு முகாம்களின் மத்தியில் அவன் தனித்து விடப்பட்டான்.
அனைத்து பிரிவினைகளும் அவன் தானே ஏற்படுத்திக் கொண்ட பிரிவினைகள் அல்ல. அவன்மேல் திணிக்கப்பட்ட பிரிவினைகள். அப்படி திணிக்கப்பட்ட காரணத்தினால் தான் அவன் எல்லாவற்றையும் மேற்கொள்ள முடிந்தது.
நாம் கற்றுக் கொள்ளக்கூடிய காரியங்கள்
1. பிரிவினைகளை நாமே உண்டாக்கினால் அந்தப் பிரிவினைகளினால் நாம் அழிந்து போய் விடுவோம்.
2. பிரிவினைகள் நம்மேல் திணிக்கப்படுமானால் அதை மேற்கொள்ள ஜெயம் கொள்ள நமக்குக் கடவுள் கிருபை தருவார்