Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12
பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்ட நபர்களில் சாலமோனை போலக் கடவுள் ஒரு மனிதனை ஞானத்திலும், செல்வத்திலும் மிகவும் அதிகமாக ஆசீர்வதித்ததாக யாரும் கிடையாது.

சாலமோன் கடவுளிடம் கேட்டது தன் அரசாங்கத்தை நிர்வாகம் பண்ண வேண்டிய ஞானத்தை மட்டும்தான்.
ஆனால் கடவுள் அவன் கேட்காத செல்வத்தையும், ஞானத்தோடு சேர்த்து அளவு இல்லாமல் வழங்கினார்.
இப்படிப்பட்ட இரட்டை ஆசீர்வாதத்தை வேதத்தில் பெற்றவர்கள் யாரும் கிடையாது. அந்த அளவுக்கு அவனுடைய ஞானமும், அவருடைய செல்வ செழிப்பும் அவனுடைய ஆட்சி காலத்தில் சிறந்து விளங்கியது.

சாலொமேனின் ஞானத்தைக்கேட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.
(1 இராஜாக்கள் 4:34.)

சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.
(1 இராஜாக்கள் 4:30)
இதற்கெல்லாம் காரணம்
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்ததுதான்.
(1 இராஜாக்கள் 4:29)
அதன் விளைவாக
அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்.
ஆயிரத்து ஐந்து. பாட்டுக்களையும் எழுதினான்.
(1 இராஜாக்கள் 4:32)
அதேபோலவே அவனுக்கு அளவில்லாத செல்வத்தையும் கடவுள் அளித்தார்.
அவனுடைய நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை. சாலமனுடைய ஆண்டு வருமானம் 25 டன் தங்கம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அவனுடைய சிங்காசனம் தந்தத்தினால் செய்யப்பட்டு பசும்பொன் தகட்டினால் மூடப்பட்டது.
அந்தக் காலத்தில் எந்த அரசாங்கத்திலும் செய்யப்படாத‌ அளவுக்குச் சிங்காசனமும் அதில் ஏறுகின்ற படிக்கட்டுகளும் அமைந்து இருந்தது.

இதைத் தவிர
சாலொமோன் இரதங்களையும், குதிரைவீரரையும் சேர்த்தான், அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள், அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
(1 இராஜாக்கள் 10:26)

எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளின் கட்டளையை மீறி
சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
1 இராஜாக்கள் 11:1.

இதன் விளைவாகச் சாலமோன் தேவனுடைய இரண்டு முக்கியமான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனான்.
1
உபா17:6 சொல்லப்பட்டபடி அரசன் குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்துக்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்க வேண்டும் என்கிற கட்டளையை மீறினான்.

2.
உபா 7:1-6 ல் சொல்லப்பட்டபடி, ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர்களௌடு சம்பந்தம் கலக்காமால், குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக என்கிற கட்டளையையும் மீறினான்.
இதைக் குறித்து தேவன் இரண்டு முறை எச்சரித்தும் சாலமோன் அதற்குச் செவி சாய்க்கவில்லை.
இதனால் கர்த்தர் அவன்மேல் மிகவும் கோபம் கொண்டார்.11: 10
தான் எழுதிய நீதிமொழிகளையே தன்னால் பின்பற்ற முடியாமல் போயிற்று.
நீதி19:3.
தன்னுடைய இறுதி நாட்களிலா தன் தகப்பனாகிய தாவீதைப் போலக் கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
(1 இராஜாக்கள் 11:6)
சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.
(இராஜாக்கள் 11:7.)
தன் தகப்பன் தாவீதை போல் கஷ்டப்படாமல் பாடுபடாமல் அரசாங்கத்தையும், தேவனுடைய ஆசீர்வாதத்தையும் சுலபமாகச் சம்பாதித்த சாலமோன் இறுதி நாட்களில் கடவுளை மறுதலித்து பிற தேவர்களைப் பின்பற்றினான்
இதன் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்.
1.
செல்வ செழிப்பு, உலக ஞானம் ஆடம்பரங்கள் இவைகள் நிரந்தரமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அல்ல.
2.
நாம் எப்பொழுதும் பிரித்தெடுக்கப்பட்ட தேவனுடைய இனக்குழு என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.
விசுவாசிகளுடைய உறவு என்பது இயேசு கிறிஸ்து நமக்காகச் சிந்திய இரத்தத்தினால் ஏற்பட்டது.
இந்த உறவில் மொழி, இன, சாதி இவற்றின் அடிப்படையிலான இரத்த பந்தங்கள் இணையக் கூடாது.
இந்த உபதேசத்தை சபை உறுதியாகப் பின்பற்ற வேண்டும்


ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நாம் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிற புத்தியீனராகக் காணப்படக் கூடாது
கலாத்தியர் 3:3