Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் சில முக்கிய சிறப்புகள்.
உங்கள் சிந்தனைக்கு !

எபிரேயருக்கு எழுதப்பட்ட
கடிதத்தின் சில முக்கிய சிறப்புகள்.


1 பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்காத ஒரு புதிராக‌ உள்ள கடிதம்.
யார் எழுதினார்? யாருக்காக எழுதப்பட்டது? எப்பொழுது எழுதப்பட்டது? என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும்.

2.விசுவாசிகளின்
ஆசாரியத்துவத்தை தெளிவாக விளக்கும் ஒரு நிருபம்.

3. எல்லோருக்கும் தேவனிடத்தில் நெருங்க இலவசமான சமவாய்ப்பு என்பதே எபிரேய நிருபத்தின் முக்கிய சாரம்.
we have free, equal, and unlimited access to God.
A manual for a believer


4.தேவனுடைய பிள்ளைகள் பின்வாங்கிப்போகலாம் என்பதை எச்சரிக்கும் ஒரு அருமையான நிருபம்.

5.It throws more light on Jesus Christ than any other New Testament part.
கிறிஸ்துவை பற்றிப் புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற கடிதங்களில் சொல்லப்படாத, விளக்கப்படாத, பல காரியங்களை இந்தப் புத்தகத்தில் நாம் படிக்கலாம்.


6.இந்த நூல் ஐந்தாவது நற்செய்தி நூல் என்றும் சொல்லப்படுகிறது.

ஏனென்றால் இந்த நூலில் தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தற்போதைய ஊழியத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபற்றி வேறு எந்தப் புதிய ஏற்பாட்டு நூலிலும் சொல்லப்படவில்லை.
its emphasis on Christ’s present work.

7. மேலும் இந்த நூல் புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் இணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்கிறது.
பழைய ஏற்பாட்டில் மையப் பொருள்களாக உள்ள ஆசரிப்பு கூடாரம், பலிகள், தேவாலயம், ஆசாரியத்துவம் போன்றவைகளைப் பற்றி வேறு எந்த நிரூபத்திலும் சொல்லப்படாத கருத்துக்கள் இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தக்கடிதம் வேதாகமத்தில் சேர்க்கப்படாமல் இருந்திருக்குமானால் இயேசு கிறிஸ்துவின் மகா பிரதான ஆசாரிய ஊழியத்தைப் பற்றிய ஒரு மிகத் தெளிவான புரிதல் சபைகளுக்குக் கிடைத்திருக்காது

.

8.மேலும் விசுவாச வீரர்களின் பட்டியலைப் பற்றிய மிக அழகான ஒரு விளக்கம் வேறு எந்தப் புதிய ஏற்பாட்டு கடிதங்களிலும், நூல்களிலும், கிடையாது.

இதை ஒரு மகிழ்ச்சியான புத்தகமாக நாம் படிக்கும்போது உண்மையாகவே நம் உள்ளத்தில் பழைய ஏற்பாட்டு பற்றிய பல புரிதல்கள் நமக்கு உண்டாகும்.


10.It was regarded as the best Greek in NT

இந்தக் கடிதம் மிக உயரிய கிரேக்க நடையில் எழுதப்பட்டது.

புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற அனைத்து நூல்களும் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. ஆனால் இந்தக் கடிதம் மட்டும் மிக உயர்ந்த கிரேக்க (classical Language)நடையில் எழுதப்பட்டது என்று பலரும் சொல்லுகிறார்கள்.


'We should be thankful to God for the work of this great nameless one who wrote with incomparable skill and beauty about Jesus' WILLIAM BARCLAY