Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நாம் நடமாடும் நிரூபங்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்
உங்கள் சிந்தனைக்கு:

நாம் நடமாடும் நிரூபங்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்படியிருந்தால்தான் நாம் அறிவிக்கும் கடவுளுடைய
அருட் செய்தியில் பரிசுத்த ஆவியானவரின் கிரிகைகள் வெளிப்படும். அதில் தேவனுடைய வல்லமை தெளிவாகக் காணப்படும். நிரூபங்களையே படிக்காமல் இருந்தால், எப்படி நாம் நடமாடும் நிரூபங்களாக மாற முடியும்?
சபையில் நிரூபங்களைப் பேசாமல், போதிக்காமல் இருக்கும்போது, அந்த நிரூபங்களின் தாக்கம் நம்முடைய வாழ்வில் எப்படி வெளிப்படும்? நடமாடும் நிரூபங்களாக மாறுவதற்கு, புதிய ஏற்பாட்டின் நிரூபங்களை சபைகளில் அதிகமாகப் போதிக்கவும், தியானிக்கபட வேண்டும்.
புதிய ஏற்பாட்டு சத்தியங்களைப் பற்றிய ஆனா, ஆவன பாடமே விசுவாசிகளுக்குப் புரியாமல் இருக்கும்போது, அல்லது அதைப் புரியவைக்க மறுக்கும்போது, அவர்கள் எப்படி நடமாடும் நிரூபங்களாக மாறுவார்கள்?
ஆட்டமும், பாட்டும், கூத்தும் ‘ஆராதனை’ என்கிற பெயரில் சபையில் பெருகும்போது, விசுவாசிகள் எப்படி நடமாடும் நிரூபங்களாக மாறுவார்கள்?
இன்றைய சபையின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள வீழ்ச்சியும், நற்செய்திக்கு எதிரான அலைக்கும் இதுவே முக்கிய காரணமாக உள்ளது.
இன்றைய வாலிபர்களை, நாம் நடமாடும் நிரூபங்களாக முதலில் மாற்ற வேண்டும். இதைப் புரிந்து கொள்ளும்வர்கள் பாக்கியவான்கள்.
புதிய ஏற்பாட்டு சத்தியங்களை போதிக்க மறுக்கும் போதகர்களும், அதை ஆர்வத்தோடு கேட்கும் மனம் இல்லாத விசுவாசிகளும், இன்றைய சபைகளில் சொத்துகளாக இல்லை.
They are Liabilities to the body of Christ.
"எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே. ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்கள் என்று வெளியரங்கமாக இருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது."
— 2 கொரிந்தியர் 3:2,3