Expository commentary on the book of Nehemiah .* *நெகேமியாவின் புத்தகம் வேதபாடம் 13*
*உங்கள் சிந்தனைக்கு.*
*Expository commentary on the book of Nehemiah .*
*நெகேமியாவின் புத்தகம் வேதபாடம் 13*
தியானிக்க வேண்டிய வேத பகுதி 8:10
52 நாட்களில் எருசலேம் நகரின் மதில்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு
நெகேமியா ஒரு வேத கருத்தரங்கை (Bible conference)ஏற்பாடு செய்தான். அதில் செய்தி கொடுக்கும்படியாக எஸ்ராவை அழைத்திருந்தார். எஸ்ரா முதல் ஐந்து ஆகமங்களை எடுத்து வந்து அதில் உபாகமத்தை மையமாக வைத்துப் போதித்தார் என்று நம்பப்படுகிறது.
அப்படி அவன் வேதத்தில் உள்ள வசனத்தை விளக்கும்பொழுது யூதர்கள் யூதர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். அப்பொழுது நேகேமியா சொன்ன வார்த்தை இது
". நீங்கள் துக்கப்படவேண்டாம், யெகோவா கொடுக்கும் மகிழ்ச்சியே உங்கள் பெலன்” என்றான்.
நெகேமியா 8:10
" the joy of the Lord is your strength.’'
இந்த வேத வசனம் இரண்டு காரியங்களை வலியுறுத்துகிறது.
வேத வசனத்தை படிக்கும் பொழுது நமக்கு உண்மையான மனமாற்றமும் மன மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும். இந்த இடத்தில் நெகேமியா ஏன் யூதர்களை அழ வேண்டாம் என்றுசொல்வதற்கான காரணம்,
தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு மனம் திரும்புவதற்கு ஒப்புக்கொடுத்து பட்ட பிறகு அழ வேண்டி அவசியம் இல்லை.
பாவங்கள் மன்னிக்கப்பட்ட பிறகு பாவத்தை குறித்து அழ வேண்டிய அவசியம் இல்லை.
பாவங்கள் கழுவப்பட்ட ஒரு தேவனுடைய பிள்ளை பாவங்கள் மன்னிக்கப்பட்டவன் செய்யக்கூடிய காரியம் அவன் கர்த்தருக்குள் மன மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவன் அழ வேண்டிய அவசியம் இல்லை. பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்கிற ஒரு விஷயத்தை வேத வசனம் அவனுக்கு கொடுக்கிறது வேத வசனத்தின் அடிப்படையில் ஏற்படுகின்ற விசுவாசம் தருகின்ற மகிழ்ச்சியை எதற்க்கும் ஒப்பிட முடியாது. விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்படாத மகிழ்ச்சி அது உணர்வின் வெளிப்பாடு
அது மறைந்து போய்விடும் விரைவில். ஆனால் வார்த்தையின் அடிப்படையில் ஏற்படுகின்ற விசுவாசம் தருகின்ற மகிழ்ச்சி நிலையானது. அந்த மகிழ்ச்சி ஒருவனுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் விசுவாசிக்கு தேவன் கொடுக்ககும் மகிழ்ச்சி மிகவும் அவசியம். மகிழ்ச்சி இல்லாத விசுவாசிக்கு தேவனுடைய சித்தத்தை செய்வது என்பது ஒரு தண்டனையாக அவன் கருதுவான்
உண்மையான *விசுவாசிக்கு தேவனுடைய சித்தத்தை செய்வதுதான் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி. கடவுள்* நமக்கு துக்கத்திற்கு பதிலாக மகிழ்ச்சியை தர மாட்டார் துன்பத்தின் மத்தியிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
ஒருவன் வேத வசனத்தை நன்கு புரிந்து கொள்ளும் போது தான் அவனுக்கு உண்மையான மகிழ்ச்சி ஏற்படும். வசனத்தை புரிந்து அதன்படி நடக்கிறவன் பாக்கியவான். *கிறிஸ்தவ வாழ்க்கையில் கீழ்ப்படிதல் என்கிற சக்கரத்திற்கு மகிழ்ச்சி என்கிற எண்ணை பூசப்பட வேண்டும் . இல்லாவிட்டால் நாம் ஒரு மகிழ்ச்சி இல்லாத கிறிஸ்தவத்தை உலகத்திற்கு பறைசாற்று விடுகிறோம். எனவே வேத வசனங்கள் மூலம் அவைகள் கொடுக்கின்ற வெளிச்சங்கள் மூலம் நாம் கர்த்தருக்குள் மணமகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்வோம்.*