Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம், வேத பாடம் 11
உங்கள் சிந்தனைக்கு:

2 அரசர்கள் புத்தகம்,

வேத பாடம் 11

"எலிசா அவனை நோக்கி, நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லும், ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்."
2 இராஜாக்கள் 8:10
இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன?
எலியா மரிப்பதற்கு முன்பாக மூன்று கட்டளைகளை நிநிறைவேற்றும்படியாகடவுள் அவனுக்கு ஆணையிட்டார்.

ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம்பண்ண வேண்டும்

2.இஸ்ரயேல் அரசனாக நிம்சியின் மகன் யெகூவையும் அபிஷேகம்பண்ண
வேண்டும்

3. எலிசாவை வரப்போகும் இறைவாக்கினனாகவும் அபிஷேகம்பண்ண வேண்டும்.

1 இராஜாக்கள் 19:15-16

இந்த மூன்று கட்டளைகளில் எலிசாவை மட்டும் அவன் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணினான்.

மற்ற இரண்டு கட்டளைகளை அவன் நிறைவேற்ற முடியவில்லை.

அதற்குப் பின்னாக எலிசா இந்த மீதமுள்ள இரண்டு கட்டளைகளையும் நிறைவேற்றினான்.

இது நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?

ஒரு மிகப்பெரிய தலைவனுக்குப் பின்னால் தலைமை பீடத்துக்கு வருகின்றவர்கள் தங்களுடைய முன்னோர் விட்டுப் போன கடவுள் முன் குறித்த கடமைகளை நிறைவேற்றக் கருத்துடன் இருக்க வேண்டும்‌.

அப்படி புதிய தலைவர்கள் கருத்துடன் இருக்கும்போது தான் தேவன் அவர்களுக்கு அந்தக் கடமைகளை நிறைவேற்ற வழி கொடுப்பார்‌.




தலைமை பீடத்திற்கு வந்தவுடன் முன்னோர்கள் விட்டுப் போன கடமைகளைத் தேடி கண்டுபிடித்து அவைகளை நிறைவேற்ற வேண்டும். பதிய தலைவர்கள் செயல்படுத்தும் முறைகள் வேறாக இருக்கலாம். (Way of functioning)
ஆனால் அவர்கள் முன்னோர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தைச் சிதைத்து விடக் கூடாது.

அடுத்து நாம் தியானிக்க வேண்டிய காரியம்.

எலிசா வாழ்ந்த காலத்தில் சீரிய அரசன் பெனாதாத் வியாதியாயிருந்தான்.
‌அப்பொழுதுதன்னுடைய உதவியாளராக இருந்த ஆசகேலை அழைத்து
ஒருஅன்பளிப்பை எடுத்துக்கொண்டு, இறைவனுடைய மனிதனைச் சந்தித்து அவன்மூலம் யெகோவாவிடம் ஆலோசனை கேட்டு வியாதியிலிருந்து சுகமடைய‌ கூடுமோ என்று அறிந்து வரச்சொன்னான.
காரணம் கடவுள் நாகமானுக்கு கடவுள் செய்த அதிசயத்தை அவன் கேள்விப்பட்டிருக்கலாம்.

ஆனால் எலிசா இந்த மிகப்பெரிய அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெளிவாக வேதத்தில் சொல்லப்படவில்லை.

இந்தச் சம்பவத்தை இன்றைய நிலைமையோடு ஒத்துப் பார்க்க வேண்டும்.

அவ்வளவு பெரிய காணிக்கையை பார்த்தும் அவன் சலனப்படாமல் கர்த்தர் கூறிய காரியத்தைத் தெளிவாகச் சொன்னான்.

அப்பொழுது எலிசா சொன்னவைகள்தான் வேலை குறிப்பிட்ட வார்த்தைகள்.8:10

இந்த இடத்தில் எலிசா மூன்று காரியங்களைத் தீர்க்கதரிசனமாக சொன்னான்.



1. சீரியா அரசன் வியாதி நீங்கிப் பிழைப்பான்.

2. ஆனாலும் அவன் சாகவே சாவான்.

3.அடுத்தது ஆசகேல் சீரிய நாட்டுக்கு அரசனாவான்.


இந்த முதல் இரண்டு தீர்க்கதரிசனங்களின் உண்மையான அர்த்தம் என்ன.

"நிச்சயமாகச் சுகமாவாய்"

"ஆனால் அவன் கட்டாயம் இறப்பான்"

இவை இரண்டும் ஒன்றுக்கொன்று புரிந்து கொள்ள முடியாத காரியமாகக் காணப்படுகிறது.



உண்மையான அர்த்தம் என்னவென்றால் அவன் வியாதியிலிருந்து விடுதலை பெறுவான்.
ஆனாலும் அவனக்கு நியமிக்கப்பட்ட மரணத்தைச் சந்திப்பான்

ஆசகேல் எலிசா கூறிய முதல் காரியத்தை மட்டும் அரசனிடம் சொன்னான்

மரித்துப் போவான் என்கிற காரியத்தை அவன் அரசரிடம் சொல்ல வேண்டியதை மறைத்து விட்டான்‌.

எலிசா சொன்ன முழு தீர்க்கதரிசனத்தை சொல்லவில்லை பாதியை மறைத்துப் பாதியை சொன்னான்

. அதன்படி சீரிய அரசன் வியாதியிலிருந்து விடுதலை பெற்றான்.

ஆனால் ஆசகேல் சீரியா தேசத்து மன்னனை
அடுத்தநாள் ஆசகேல் ஒரு தடித்த துண்டை எடுத்துத் தண்ணீரில் நனைத்து அரசனுடைய முகத்தை அழுத்தி அவனைத் தந்திரமாகக் கொலை செய்தான் என்பதுதான் 8:15ன் உண்மையான அர்த்தம்‌.

But the very next day, someone took a heavy quilt, soaked it in water, covered the king's face, and suffocated him. Message Bible

"Then he treacherously smothered him with a thick cloth soaked in water". Herald Wilmington.

ஆசகேல் அவனுக்குப் பின் அரசனானான்.

இதுதான் 8:10 மற்றும் 8:15-ன் உண்மையான அர்த்தம்