Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 10
உங்கள் சிந்தனைக்கு:

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 10

தலைப்பு.

நல்ல நேரங்கள் அல்ல அவைகள் தேவனால் முன் குறிக்கப்பட்ட தருணங்கள்.

"Good timing is not coincidence but God's providence."
Herald Wilmington

படிக்க 8:1-6.
இந்த நிகழ்வில் சொல்லப்பட்ட சம்பவங்கள் தற்செயலாக நடந்தது போல் இருக்கலாம்.

ஆனால் அவைகள் தேவனால் முன் குறிக்கப்பட்ட நிகழ்வுகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ‌

எலிசா தான் உயிரோடு எழுப்பின பையனின் தாயிடம் ஏழு வருடம் தேசத்தில் பஞ்சம் என்பதைச் சொல்லி இருந்தார். எனவே அவள் அந்தப் பஞ்சத்தில் இருந்து தப்பிப்பதற்காக
அவள் பெலிஸ்தரின் தேசத்தில் குடியிருந்து பஞ்சம் முடிந்த பிறகு இந்த நாட்டிற்குத் திரும்பினாள்.

குறிப்பிட்ட அந்த ஏழு வருடங்கள் முடிந்தபின் பெலிஸ்தியருடைய நாட்டிலிருந்து அவள் திரும்பிவந்து தன் வீட்டையும், நிலத்தையும் மீட்டுக்கொள்வதற்காக அரசனுடன் முறையிடும்படிச் சென்றாள்.

அந்த நேரத்தில் கேயாசி அரசனிடம் இறந்த பையனை எலிசா எப்படி திரும்பவும் உயிர்ப்பித்தார் என்பதைக் கூறிக் கொண்டிருந்தான். அதேவேளையில் கேயாசி சூனேமியாளை ராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

அப்பொழுது அரசன் அவள் வந்த காரணத்தை விசாரிக்க, அவளும் தன்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்தாள்.

அப்பொழுது அரசன் தன் அதிகாரிகளில் ஒருவனிடம், “இவள் இந்த நாட்டைவிட்டுச் சென்ற நாளிலிருந்து இன்றுவரை அவளுடைய விளைநிலத்தின் வருமானம் உட்பட, அவளுடைய உடைமைகள் யாவற்றையும் திரும்பக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டான்.
2 இராஜாக்கள் 8:6

இந்த நிகழ்வுகள் தற்செயலாக நடந்த காரியம் அல்ல. இவைகள் அவளுக்கு நல்ல காலங்கள் என்று சொல்லக்கூடிய வார்த்தைகளும் அல்ல.

இவைகள் தேவனால் முன் குறிக்கப்பட்ட ஆசிர்வாதங்கள்.

நமக்கு நல்ல காலம் என்று ஒன்றும் கிடையாது. நம் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்துமே தேவனால் முன் குறிக்கப்பட்ட நிகழ்வுகள்.


வேதத்தில் உள்ள நான்கு நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1.ரூத் போவாசின் வயலில் கதிர்களைப் பொறுக்கியது தற்செயலாக‌ நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டாலும் அவைகள் தேவனால் முன் குறிக்கப்பட்டவைகள்.
ரூத் 2:3

2.ஆபிரகாம் பலியிடுவதற்காக முட்செடியில் கொம்புகள் சிக்குண்டிருந்த ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் கண்டதும் தற்செயலான காரியம் அல்ல.
ஆதியாகமம் 22:13

3.பார்வோனுடைய குமாரத்தி மூன்று மாத கைக்குழந்தையான மோசே வைக்கப்பட்ட நாணல் பெட்டியைப் பார்த்ததும் தற்செயலான செயல் அல்ல. யாத் 2:5

4.அகாஸ்வேரு அரசனால் நித்திரை வராத காரணத்தினால், எனவே அரசாட்சியின் நிகழ்வுகளின் பதிவேடாகிய வரலாற்றுப் புத்தகத்தைப் படித்து
அதில், அகாஸ்வேரு அரசனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருந்த வாசல் காவலர்களான, அரசனின் அதிகாரிகள் பிக்தானா, தேரேசு ஆகிய இருவரையும், மொர்தெகாய் காட்டிக் கொடுத்த காரியத்தை அறிந்ததும் தற்செயல் நிகழ்வு அல்ல.
எஸ்தர் 6:2

நமது கடவுள் எல்லாவற்றையும் முன்னதாக அறிந்து பார்த்து அதற்கேற்றபடி முன்னதாக திட்டமிடுகிறவர்.

ஆங்கிலத்திலே "providence" என்கிற வார்த்தைக்கு முன்னதாக திட்டமிடுதல் என்று அர்த்தம் கொள்ளலாம்.

"God providentially controls events in our life."

தேவனை அறிந்த ஒரு மனிதனுக்கு அவன் வாழ்க்கையில் நடக்கின்ற எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தும் தேவன் முன் குறித்த நிகழ்வுகளாக இருக்கின்றன என்கிற ஒரு விசுவாசம் அவசியம் தேவை.

சில காரியங்களுக்கு ஏன் நடந்தது என்பதை அறிந்து கொள்ள பல வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் அந்த நிகழ்வுகள் அனைத்தும் தேவனால் திட்டமிடப்பட்டவை.

கடவுளை அறிந்த மனிதனுக்கு தற்செயலாக எந்த ஒரு அதிசயம் நடக்காது. இதைப் பற்றி வியர்ஸ்பி அவர்கள் எழுதிய வார்ததைகளையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

Our English word “providence'

comes from two Latin words, "pro" and "video," which together mean "to see ahead, to see before." God not only knows what lies ahead, but He plans what is to happen in the future and executes His plan perfectly. Perhaps a better word is "prearrangement." In no way does God's providence interfere with our power of choice or our responsibility for the choices we make and their consequences.

நாம் அவருக்குள் கட்டுப்பட்டு இருக்கும்பொழுது அவர் நம் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பது உண்மையான சத்தியம்