2 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 9
2 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 9
தலைப்பு: அகக்கண்கள், புறக்கண்கள்
நம்முடைய அகக்கண்களை கடவுள் ஒளியூட்ட வேண்டும்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சோதனைகளை மேற்கொள்ள நமக்கு விசுவாச பார்வை வேண்டும் என்று சொல்வது வழக்கம்.
இதை இன்னொரு பார்வையில் சொல்ல வேண்டுமானால், நம்முடைய அகக்கண்கள் ஒளியூட்டப்பட வேண்டும்.
Our spiritual eyes or inner eyes should be brightened or enlightened.
எலிசாவை பிடிப்பதற்காகச் சீரியராஜா குதிரைகளையும், தேர்களையும், ஒரு பலத்த இராணுவத்தையும் அனுப்பினான். இவர்கள் இரவில் வந்து பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டனர்.
அடுத்த நாள், இறைவனுடைய மனிதனின் வேலையாள்,
“ஆ, என் எஜமானே! நாங்கள் என்ன செய்வோம்?” என்று எலிசாவை நோக்கிப் பதறினான் (2 இராஜாக்கள் 6:15).
அதற்கு எலிசா அவனை நோக்கி,
“பயப்படாதே. அவர்களுடைய பக்கத்தில் இருப்பவர்களைக் காட்டிலும், நம்முடைய பக்கத்தில் இருப்பவர்கள் அநேகர்” என்றான் (2 இராஜாக்கள் 6:16).
அப்பொழுது எலிசா, தன் அகக்கண்களால் பார்த்த காரியத்தைத் தன்னுடைய வேலையாள் புறக்கண்களால் பார்க்கக் கடவுளிடம் விண்ணப்பித்தான்.
அப்பொழுது யெகோவா அந்த வேலையாளின் கண்களைத் திறந்தார். அவன் பார்த்தான் — மலைகளை மூடத்தக்கதான அநேக நெருப்புக் குதிரைகளும் தேர்களும் எலிசாவைச் சூழ்ந்திருப்பதை அவன் கண்டான்.
அதுபோல, நாம் சோதனைகளைச் சந்திக்கும்பொழுது அவைகளை மேற்கொள்ள நமக்கு இந்த அகக்கண்களின் பார்வை அவசியம்.
நம்முடைய புறக்கண்களின் பார்வை (The sight of our physical eyes) பல நேரங்களில் சோர்வை, அவிசுவாசத்தை, ஏமாற்றத்தை, பயத்தை, கலக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இப்படிப்பட்ட நேரங்களில் எபேசிய பட்டணத்திற்கு பவுல் எழுதிய கடிதத்தில் உள்ள வார்த்தைகளை நாம் நினைவுகூர வேண்டும்:
"அவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கிற நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எவ்வளவு மேன்மையானது என்பதையும் நீங்கள் அறியும்படியாக உங்கள் அகக்கண்களுக்கு ஒளியூட்ட வேண்டுமென்று வேண்டுகிறேன்" – எபேசியர் 1:19 (தே. ராஜரீகம் . மொழிபெயர்ப்பு)
"விசுவாசிப்போரான நம் பொருட்டு அவர் விளங்கச் செய்யும் வல்லமை எத்துணை பெருமைமிக்கது என்றும் நீங்கள் அறிந்து கொள்ளும்படி உங்கள் அகக்கண்களுக்கு ஒளி தருவாராக!" – (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு)
ஒரு விசுவாசி கடவுளிடம் நம்பிக்கை வைக்கும்போது, அவர் அவனிடத்தில் வெளிக்காட்டும் வல்லமையின் மகிமையை அவன் அநேக நேரங்களில் புரிந்துகொள்வதில்லை.
அதனால்தான் நாம் சோர்ந்துவிடுகிறோம்.
நமக்குள்ள பாதுகாப்பையும், அவர் அளிக்கப்போகும் தயைகளையும் சரியாகப் புரிந்து கொள்வதற்காக, அவர் நம்முடைய ஆவிக்குரிய கண்களை ஒளியூட்ட வேண்டும்.
இந்தப் பார்வையை எபேசிய பட்டணத்தில் இருந்த விசுவாசிகள் பெற வேண்டும் என்று பவுல் ஜெபித்தார்.
இன்றைக்கு விசுவாசிகள் இந்த ஒளியூட்டப்பட்ட பார்வையை தேவனிடமிருந்து பெற வேண்டும்.
இப்படிப்பட்ட பார்வையை விசுவாசிகள் பெற, போதகர்கள் விசுவாசிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு, “நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்” என்று சொல்லித் தங்களை சார்ந்திருக்க வைத்துக் கொள்ளக் கூடாது.
விசுவாசிகள் தேவனை தாங்களே சார்ந்து வாழப் பழக வேண்டும்.
பவுல் எடுத்துக்கொண்ட முக்கியமான ஜெபக்குறிப்புகளில் இதுவும் ஒன்று.
Dear pastors, please make your believers fully dependent on God's power and not at the mercy of your prayers.
ஒரு மேய்ப்பனின் முக்கியமான கடமைகளில் ஒன்று – தன் விசுவாசிகளுக்கு வேதத்தை நன்கு புரிய வைப்பது.
"உமது வேதத்தில் உள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்" – சங்கீதம் 119:18
விசுவாசிகளாகிய நாமும் அனுதினமும் தேவனை நோக்கி, நம்முடைய அகக்கண்கள் ஒளியூட்டப்பட வேண்டும் என ஜெபிக்க வேண்டும்.
அப்பொழுது சாத்தான் கொண்டு வரும் எல்லா பயங்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.
இன்றைக்கு சில சபைகளின் அகக்கண்கள் மங்கி போய் உள்ளன.
அதனால்தான் அவர்கள் அரசியலை நோக்கியும், அரசியல்வாதிகளின் தயவை எதிர்நோக்கியும் காத்திருக்கிறார்கள்.
"தேவனே, என் அகக்கண்களை அனுதினமும் பிரகாசிக்கப்பண்ணும்"
– இது நம்முடைய அனுதின ஜெபமாக மாறட்டும்!