Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

சாத்தானின் முதல் பொய், முதல் வாக்குறுதி
உங்கள் சிந்தனைக்கு:

சாத்தானின் முதல் பொய், முதல் வாக்குறுதி எது தெரியுமா?

1. முதல் பொய்:
"நீங்கள் சாக மாட்டீர்கள்"
("You will not surely die.")

இந்தச் சாத்தானின் முதல் பொய்தான் மனுக்குலத்தை பாவத்தில் தள்ளியது.

இந்தப் பொய்யை முதலில் நம்பியவள் ஏவாள்.
அதை நம்பி வஞ்சிக்கப்பட்டாள்.

தனக்குக் கிடைக்க வேண்டிய பூமியை, தான் ஆள வேண்டிய இந்த மண்ணுலகை மனுக்குலம் ஆளக்கூடாது என்று கருதி,
அவன் சொல்லிய முதல் பொய்யிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டான்.

சந்தேகத்தை முதலில் விதைத்துப், பொய்யை முதலீடு செய்து,
மிகப் பெரிய அறுவடையை அறுத்துவிட்டான்.

2. அடுத்த பொய்:
"நீங்கள் தேவர்களைப் போல் இருப்பீர்கள்"

கர்த்தர் சொன்ன வார்த்தையை நம்ப மறுத்து,
பிசாசு அடுத்தடுத்து சொன்ன இரண்டு பொய்களையும் நம்பி,
மிகப்பெரிய வீழ்ச்சிக்குத் துவக்கமாக இருந்தவள் ஏவாள்.

அவன் சொன்ன இரண்டாவது பொய் "நீங்கள் தேவர்களைப் போல் இருப்பீர்கள்" –
இந்தப் பொய் பல்வேறு மதங்களில் கோலோச்சி வருகிறது.

மனிதன் ஒருபோதும் தெய்வமாக முடியாது.
சிருஷ்டி ஒருபோதும் சிருஷ்டிகராக மாற முடியாது.

ஆனால் சாத்தானுடைய இந்த வஞ்சகத்தையே உலகம் பின்பற்றுகிறது.
பிற மார்க்கங்கள் இதைத்தான் போதிக்கின்றன.

3. முதல் பொய்யான வாக்குறுதி:

சாத்தான் இந்த இடத்தில் பொய்யை மட்டும் சொல்லவில்லை –
மிகப்பெரிய தவறான வாக்குறுதியையும் ஏவாளுக்குச் சொன்னான்.
இதுதான் பிசாசு கொடுத்த தவறான முதல் வாக்குறுதி.
அந்த வாக்கை ஏவாள் நம்பினாள்.

ஒரு வினாடி ஏவாள் யோசித்திருந்தால்,
கணவனான ஆதாமின் ஆலோசனையைக் கேட்டிருந்தால்,
மிகப்பெரிய வீழ்ச்சியிலிருந்து தப்பித்திருப்பாள்.

ஆனால் சாத்தான், கணவன் இல்லாத நேரத்தில் அவளை ஏமாற்றினான்.
அதுபோல் நாமும், நம்முடைய பரம மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் ஐக்கியத்தை இழந்திருக்கும்போது,
அந்த ஐக்கியத்திலிருந்து தூரமாக இருக்கும்போது,
அதைப் பயன்படுத்தி நம்மை வஞ்சிக்கச் சாத்தான் எப்போதும் ஆயத்தமாக இருப்பான்.

எனவே, நம்முடைய மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் ஐக்கியத்தை நாம்
கண்ணும் கருத்துமாக ஒவ்வொரு நாளும் காத்துக் கொள்ள ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பிசாசானவன், கர்ஜிக்கும் சிங்கம்போல்,
எவனை விழுங்கலாம் என்று 24 மணி நேரமும் வழி தேடிக்கொண்டு இருக்கிறான்.

எனவே பிசாசுடைய பொய்களுக்கும்,
பொய்யான வாக்குகளுக்கும் நாம் விலகி இருக்க,
கர்த்தர் நமக்குக் கிருபை தருவாராக.

சாத்தானுடைய முதல் பொய்யையும்,
முதல் வாக்குறுதியையும் நம்பி ஏமாந்த ஏவாள் –
வஞ்சிக்கப்பட்ட ஏவாள் நமக்கு மிகப்பெரிய எச்சரிப்பு!

எசேக்கியேல் சண்முகவேல்