வாழ்க்கையின் இறுதி மணத்துளியில் மீட்பை அடைந்த குற்றவாளி.
உங்கள் சிந்தனைக்கு:
வாழ்க்கையின் இறுதி மணத்துளியில் மீட்பை அடைந்த குற்றவாளி.
இவனைப் பற்றிய சில சிந்தனைகள்.
இயேசு கிறிஸ்துவின் இவ்வுலக ஊழியத்தில் அவருடைய கடைசி நண்பன் இந்தக் குற்றவாளி.
அதுபோல அவரோடு பாதாளத்திற்குசென்ற முதல் தோழனும் இவன் தான்.
He was the last companion of Jesus Christ on earth.
He was also the first companion of Christ at the gate of Paradise.
செல்வந்தன், லாசர் உவமையில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்.
மரித்தபின் எவருக்கும் மனம் திரும்பப் பரலோகத்தின் கதவுகள் திறக்கப்படுவதில்லை.
ஆதே வேளையில் இந்தக் குற்றவாளியின் வாழ்க்கையில் தேவன் உணர்த்தும் காரியம்.
மரிக்கும் இறுதி மணித்துளிவரைக்கும் ஒருவனுக்கு
பரலோகத்தின் கதவு அடைக்கப்படுவதில்லை.
No second chance for the dead.
No final chance for unbelievers till he dies..
இவனிடத்தில் காணப்பட்ட விசுவாசம் மூன்று வகைகளில் சிறந்தது.
1. புற சூழ்நிலை.
இவன் எந்தச் சூழ்நிலையில் இயேசுவை
விசுவாசித்தான்?
இவனை சுற்றிஉள்ள ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை, கடவுளைத் தூசித்தவன் என்று குற்றம் சொல்லிக் கண்டித்த காலகட்டம்.
இயேசு கிறிஸ்துவை பரிகாசம் பண்ணி அவமதித்த ஒரு காலகட்டம்.
தன்னோடு கூடக் குற்றம் சாட்டப்பட்டவனும் அவரை ஏளனம் செய்த சூழ்நிலை.
எருசலேமின் முழு அதிகார வர்க்கமும் அவருக்கு எதிராக இருந்த காலகட்டம்.
இத்தகைய எதிர்ப்பின் அலையை நீந்தி இயேசுவை கடவுள் என்று விசுவாசித்தான்.
2. குற்றவாளியின் மனநிலை.
சிலுவையில் தொங்கி மரண வேதனையில் பாடுபடுகின்ற ஒருவன் இரட்சிப்பை பெற வேண்டும் என்று யோசிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இந்தக் குற்றவாளி இயேசுவை ஆண்டவர் என்று விசுவாசித்தான்.
மரண வேதனையில் யார் இரட்சிப்பை பற்றி யோசிக்க முடியும் ?
அந்த நேரத்திலும் அவன் தன் இரட்சிப்பை குறித்த அக்கறையோடு இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்தான்.
3. அவன் யாரிடம் நம்பிக்கை வைத்தான்?
சிலுவையில்
இயேசு கிறிஸ்து தன் மகிமையை இழந்து அவமானப்பட்டு நிந்தனை அடைந்து கடவுளால் கைவிடப்பட்ட நிலையில்
காணப்பட்டார்.
அப்படி கைவிடப்பட்ட அந்த இயேசுவிடம் இந்தக் குற்றவாளி நம்பிக்கை வைத்தான்.
இதுதான் அவனுடைய விசுவாசத்தின் உச்ச நிலை.
இவன்மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்.
1. ஒரு மனிதன் மரிக்கும் வரை அவனுக்குப் பரலோகத்தின் வாசல்கள் திறந்தே இருக்கும்
2. எந்தச் சூழ்நிலையிலும்
மனம் திரும்புவதற்கான கதவுகள் அடைக்கப்படுவதில்லை.
3. ஒரு மனிதன் இரட்சிக்கப்படாமலே மரித்து விட்டான் என்று என்று நான் யாரையும் குறித்து தீர்ப்பு சொல்ல முடியாது.
மரிக்கும் நேரத்தில் ஒரு இமைப்பொழுதில் கூட ஒருவன் இயேசுவை ஏற்றுக்கொண்டு பரலோகம் செல்லலாம்.
4. கடைசி இமைப்பொழுது நேரத்தில் கடவுளை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை பரலோகத்தில் எவ்வளவு என்று யார் முடிவு செய்ய முடியும்?
5.மரிக்கும் நேரத்தில்கூட ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறவர்களை தம்முடைய
பிள்ளைகளாக்குற அவருடைய அன்பை புரிந்து கொண்டவன் உலகத்தில் எவரும் கிடையாது.