மத்தேயு 27:52 ன் உண்மையான அர்த்தம்
உங்கள் சிந்தனைக்கு:
"கல்லறைகளும் நொறுங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்தவான்களின் உடல்கள் உயிருடன் எழுந்திருந்தன."
மத்தேயு 27:52
வேதத்தில் எத்தனையோ நிகழ்வுகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாமல் உள்ளது.
யூகத்தின் அடிப்படையில் வேத அறிஞர்கள் அந்த நிகழ்வுகளுக்குப் பதில் சொன்னாலும் அவர்கள் சொல்லும் காரணங்கள் உண்மைதானா என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது.
அத்தகைய நிகழ்வுகளுக்கு நாம் பதிலைப் பரலோகத்தில் மட்டும்தான் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணகத்தில்
மட்டும்தான், வேதத்தில் புரிந்துகொள்ள முடியாத பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இயேசு கிறிஸ்து இறந்தவுடன் கல்லறைகள் திறக்கப்பட்டு அதில் காணப்பட்ட உடல்கள் உயிரோடு எழும்பியதாகச் சொல்லப்படுகிற சம்பவம்.
அவர்கள் கல்லறைகளை விட்டு வெளியே வந்தார்கள். இயேசு உயிருடன் எழுந்தபின், அவர்கள் பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்குக் காணப்பட்டார்கள்.
மத்தேயு 27:53
இந்த நிகழ்வில் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள்
1.இந்த ஆவிகள் இயேசு கிறிஸ்து மரித்தவுடன் உயிரோடு எழும்பியதா? அல்லது இயேசு கிறிஸ்து மரித்துப் பிறகு உயிரோடு எழுந்தபின் இந்த நிகழ்வு நடந்ததா?
2. இயேசு கிறிஸ்து மரித்தவுடனே இந்த ஆவிகள் உயிரோடு இருந்திருந்தால் இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தவர்களில் முதற்பலனானவர் சத்தியம் தவறாகிவிடும்.
3. எந்தச் சரீரத்தில் உயிரோடு எழும்பினார்கள்.
செத்துப்போன சரீரத்தில் உயிரோடு எழும்பினார்களா.?
இந்தக் கேள்வி எதனால் என்றால்
அவர்கள் கல்லறைகளை விட்டு வெளியே வந்து பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்குக் காணப்பட்டார்கள் என்று மத்தேயு சொல்லி இருப்பதினால்.
மத்தேயு 27:53
4. அல்லது அவர்கள் ஆவியின் தோற்றத்தில் காணப்பட்டார்களா? (சவுல் மரித்த சாமுவேலை சந்தித்த நிகழ்வு)
5. மகிமை அடைந்த சரீரத்தில் சென்றார்களா ?
(Glorious body)
6. பல பரிசுத்தவான்கள் என்று சொல்லப்பட்டு இருப்பதினால் ஏன் இந்த ஆசீர்வாதம் அவர்களுக்கு மட்டும்?
7. இந்தக் குறிப்பிட்ட பரிசுத்தவான்களுடைய ஆவி அதற்குப் பிறகு விண்ணகத்திற்கு சென்றதா ? அல்லது மறுபடியும் பாதாளத்துக்கு சென்று விட்டதா?
8. இந்த நிகழ்வு இயேசு கிறிஸ்து மரித்தவுடனே நடந்ததா?
அல்லது கிறிஸ்து மரித்து உயிரோடு எழுந்தபிறகு பாதாளத்திற்கு சென்று சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கின பிறகு நடந்த நிகழ்வா?
9. இது தனிப்பட்ட நிகழ்வு என்றால் இந்தத் தனிப்பட்ட ஆசீர்வாதம்?
மத்தேயு எதையும்மறைக்காமல் எழுதிய அந்த நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், அது நமக்கு விளங்காவிட்டாலும்.
இதை அடிப்படையாக வைத்து ஒரு உபதேசத்தை கட்டமைப்பது என்பது தவறான காரியம்.
இந்த நிகழ்வுகளை வைத்துக்கொண்டு வேதத்தின் அடிப்படை உபதேசங்களை மறுதலிக்கக் கூடாது.
இந்த இடத்தில் டேவிட் பாஸன் அவர்கள்" The road to Hell"என்கிற புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
"However, it remains a unique event, testifying to the uniqueness of that other event of which it was the accompaniment. As such, it cannot be used to establish any Christian doctrine about the future; it stands on its own in the past. It says much for the authenticity of the gospel record that such an awkward piece of information was faithfully recorded. That encourages us to accept the account as it stands and humble ourselves before what we do not fully understand."
புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை நாம் அறிந்தவர்போல் எதையாவது சொல்லி மற்றவரைக் குழப்பி விடக் கூடாது.
நம்முடைய ஞானம் குறைவுள்ளது. இந்த முக்கியமான நிகழ்வில் கடந்த இந்த முக்கியமான சம்பவங்களுக்கான பதிலைத் தேவன் மட்டும் பரலோகத்தில்.நமக்குத் தர முடியும். அதுவரை அமைதி காப்பது நல்லது.
ezekiel shanmugavel