Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

அத்தாலியாளின் கொடூர செயல்
உங்கள் சிந்தனைக்கு:

2 வது அரசர்களின் புத்தகம்‌.
வேதபாடம் 14.

அத்தாலியாளின் கொடூர செயல்.

இந்த அத்தாலியாள் ஆகாபின் மகள்.
அதாவது யேசபேலின் மகள்.
இவள் ‌ யூத தேசத்தின் அரசனான
யோராமின் மனைவி.
அகசியாவின் தாய்

யோராம் மரித்தபிறகு அவனுடைய மகன்
அகசியா அரசன் ஆனான்.
ஆனால் அவன் யெகூவால் கொல்லப்பட்டான்.

அத்தாலியாள் தன் மகன் இறந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, முழு அரச குடும்பத்தினரையும் அழிக்கத் தொடங்கினாள்.
2 இராஜாக்கள் 11:1

தான் அரசாட்சியில் நிலைத்திருக்க தன்னுடைய
பேரக்குழந்தைகளையே, அதாவது‌ தன் மகன் அகசியாவின் வாரிசுகள் அனைவரையும் குறிப்பாக ஆண் குழந்தைகள் அனைவரையும் கொலை செய்து தானே ஆட்சி பீடத்தில் இருக்க முடிவு செய்தாள்.
இவள் தன் தாய் யேசேபலை விடக் கொடூரமானவள்.

பதவி மோகம் எவ்வளவு கொடுமையானது என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வேதம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

இதில் இன்னொரு சாத்தானுடைய சதித்திட்டம் என்னவென்றால்‌ தாவீதின் வம்சத்தில் உலகத்தின் மீட்டர் இயேசு கிறிஸ்து தோன்றுவார் என்பது பிசாசுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த வம்சத்தை, அந்த இணைப்பைத் துண்டித்து விடுவதற்காக அத்தாலியாளை சாத்தான் பயன்படுத்தினான்.
ஆனால் அரசனான யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமான யோசேபாள், கொலைசெய்யப்படப்போகிற இளவரசனை
அதாவது அகசியாவின் மகன் யோவாசை அத்தாலியாளிடமிருந்து களவாகக் கொண்டுபோய், அவனுடைய செவிலியத் தாயுடன் படுக்கையறையில் வைத்தாள். இதனால் அவன் கொல்லப்படவில்லை.
ஆறு வருட காலம் அவனைப் பாதுகாத்தாள்
தன் சகோதரனுடைய குடும்பத்தைத் தன்னுடைய தாயான
அத்தாலியாளின் கொடூர செயல்களிலிருந்து காப்பாற்றினாள்.
தாவீதின் வம்சத்தை அழிக்க வேண்டும் என்கிற சாத்தானின் திட்டத்தைக் கடவுள் தடுத்து நிறுத்தினார்.

.

இந்த அத்தாலியாள் பாகாலை வழிபடுகிறவள்.

இறுதியில் அவள் படுகொலை செய்யப்பட்டாள்.

1.நாம் அறிந்து கொள்ளும் பாடங்கள்.

தாவீதின் வம்சத்தை அழிக்க வேண்டும் என்கிற சாத்தானின் சதி திட்டத்தைத் தடுத்து நிறுத்தத் தேவன் பயன்படுத்தியது யோசேபாள் என்கிற ஒரு பெண்மணி.
எப்படி பார்வோன் ஆட்சி காலத்தில் இஸ்ரேல் ஜனங்களின் ஆண் குழந்தைகள் கொல்லப்படுவதை
காப்பாற்ற கடவுள் எபிரேய மருத்துவச்சிகளை பயன்படுத்தினாரோ, அதேபோல் இந்த நிகழ்விலும் உலகத்தின் ரட்சகர் மேசியா தோன்றக்கூடிய அந்தச் சந்ததி இணைப்பைத் துண்டிக்காமல் காப்பாற்ற கடவுள் பயன்படுத்தியதும் ஒரு பெண்மணிதான்.
2. உலகத்தின் அத்தனை நிகழ்வுகளும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் அடங்கி இருக்கிறது.
Our Lord is always in control.
3.பதவி ஆசை எவ்வளவு கொடூரமானது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்
பதவி ஆசை வரும்பொழுது அவனுக்குச் சொந்த பந்தங்கள் எல்லாம் மறந்து விடுகிறது என்பதை இவளது வாழ்க்கை மூலம் முழுவதும் அறிந்து கொள்ளலாம்.
4.ஆசையைப் போலவே பதவிஆசையும் எல்லா தீமைக்கும் வேராக உள்ளது.