இரண்டாவது அரசர்கள் புத்தகம் வேத பாடம் பதினைந்து.
உங்கள் சிந்தனைக்கு.
சீரழிந்த சபைகளுக்கான இன்றைய தேவை.
இரண்டாவது அரசர்கள் புத்தகம் வேத பாடம் பதினைந்து.
பக்தி விருத்தியை போதிக்கும் போதகர்களின் அவசியம்.
இன்றைக்கு உள்ள சபையின் நிலையை பார்க்கும் பொழுது
ஆசாரியன் யோய்தா போன்ற
போதகர்கள் இன்றய தேவையாய் இருக்கிறது.
யார் இந்த யோய்தா?
யோவாஸ் அரசன்
குழந்தையாக இருக்கும் பொழுது அவனை அத்தாலியாளின் கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றி ஆறு வருடம் பராமரித்த யோசேபாளின் கணவன்தான் இவன்.
யோய்தா ஆலோசனைகள் வழங்கிய காலம் முழுவதும், யோவாஸ் கடவுளின் பார்வையில் சரியானவற்றையே செய்து வந்தான் என வேதம் குறிப்பிடுகிறது.
இவனுடைய ஆலோசனைகள் அரசனை வழிநடத்தியது.
அதன் மூலம் தேசத்தின் மக்கள் கர்த்தருக்குள் வழிநடத்தப்பட்டார்கள்.
மரிக்கும் காலம் வரை யோய்தாவின் ஆலோசனைப்படி யோவாஸ் நடந்தான்.
நாடு பாதுகாப்பாக இருந்தது.
அதனால்தான் என்னவோ இவனுடைய ஆயுட்காலம் 120 ஆண்டுகள்.
இவனுடைய சம காலத்தில் இவ்வளவு நீடித்த நாட்கள் வாழ்ந்தவர்கள் எவரும் கிடையாது.
மோசே மட்டும் 137 ஆண்டுகள் வாழ்ந்தான்.
கடவுள் யூத தேசத்தின் ஆவிக்குரிய தேவையை உணர்ந்து இவனுடைய ஆயுசு நாட்களை கூட்டி கொடுத்தார் என்று கருதிக் கொள்ளலாம்.
இவன் மரித்த பிறகு யோவாஸ்
விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும் வணங்கினான்.
ஒரு காலகட்டத்தில்
மிகச் சிறிய சீரியரின் படைக்கு,மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட யோவாஸ், பயந்து
தேவனின்
ஆலயத்தில் உள்ள எல்லாத் தங்கத்தையும் எடுத்து அவற்றை சீரிய அரசனுக்கு கொடுத்து அனுப்பினான்.
இந்த நிகழ்ச்சிமூலம்.
தேவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.
1.மக்கள் மத்தியில் சாட்சியை இழந்து கிறிஸ்தவர்களை அற்பமாக, கேவலமாக எண்ணுகிற இந்தக் காலகட்டத்தில் யோய்தா போன்று சபையை மெய்யான பக்தி விருத்திக்கு நேராக நடத்தக்கூடிய போதகர்கள் தேவை.
2.வெறுமனே உலக ஆசைகளை நிவர்த்தியாக்குகிற உபதேசங்களை விடுத்து இந்த உலகத்திற்கு வெளிச்சமாக, உப்பாக எழும்பக்கூடிய விசுவாசிகளை உருவாக்க வேண்டும்.
அப்பொழுதுதான் வழி விலகிப் போன கர்த்தருடைய சபையைப் பற்றிய கருத்துருவாக்கத்தை மாற்ற முடியும்.
அது ஒன்றே இன்றைய கட்டாயத் தேவையாக இருக்கிறது.
3.பழைய ஏற்பாட்டில் உள்ள உலகஆசிர்வாதங்களை பேசுவதை விடுத்து அவைகள் போதிக்கின்ற ஆவிக்குரிய பாடங்களை எடுத்துரைக்கின்ற வேத அறிஞர்களே இன்றைய தேவை.
4.சாட்சி நிறைந்த கிறிஸ்தவனே நடமாடும் மடல். அவனே நடமாடும் சுவிசேஷ பிரதி.
5.அனேக நற்செய்தி பிரசங்கங்கள் சாதிக்காத காரியத்தை ஒரு விசுவாசி தன் சாட்சியினால் உலகுக்கு அறிவிக்கும் செய்தி மிகுந்த வல்லமை உள்ளது.
எனவே இந்தக் காலகட்டத்தில் யோய்தா போன்ற போதகர்கள் எழும்பவும், அப்படி இருக்கின்ற போதர்கள் நீடித்த நாட்கள் வாழவும் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கடவுளுடைய பணியில்
எசேக்கியல் சண்முகவேல்.