This world is a battlefield for our prayer life.
உங்கள் சிந்தனைக்கு:
This world is a battlefield for our prayer life.
இந்த உலகத்தில் மட்டுமே நாம் ஜெபிக்க முடியும்.
துதிக்கவும் முடியும் .
ஆனால் விண்ணகத்தில் நாம் ஜெபிக்க முடியாது .
துதிக்க மட்டுமே முடியும். எனவே இருக்கின்ற இந்த மண்ணுலக வாழ்க்கையில் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ அந்த அளவுக்கு ஜெபிக்க வேண்டும்.
யாருக்கெல்லாம் ஜெபிக்க முடியுமோ அவர்களுக்கெல்லாம் ஜெபிக்க வேண்டும்.
எதற்கெல்லாம் ஜெபிக்க முடியுமோ அவைகளுக்கெல்லாம் ஜெபிக்க வேண்டும்.
நாம் போராடி ஜெபிக்க கூடிய ஒரே இடம் இந்த மண்ணுலகம் மட்டும் தான்.
இந்த ஜெபிக்க கூடிய வாய்ப்பை எவ்வளவு அதிகமாக பயன்படுத்த முடியுமோ அதை பயன்படுத்தி விண்ணுலக இராஜ்யத்திற்கு பயனுள்ள மக்களாக காணப்பட கர்த்தர் கிருபை செய்வாராக.
ஜெபியுங்கள் ஜெபித்துக் கொண்டே இருங்கள் .
ஜெப வாழ்க்கை என்பது ஒரு போராட்ட களம்.
அந்த போராட்ட களத்தில் இழப்புகள் வரலாம் ,நஷ்டங்கள் வரலாம், அவமானங்கள் வரலாம், தோல்விகள் வரலாம்.
ஆனால் இறுதியில் ஜெயம் பெற்றுக்கொள்ள கூடிய மனிதன் யார் என்றால் இடைவிடாமல் போராடி ஜெபிப்பவனே.
போராட்ட வாழ்க்கைக்கு ஆண்டவர் அழைக்கிறார் .
ஜெப வாழ்க்கை என்பது விளம்பரம் அல்ல .
ஜெபம் என்பது தேவனோடு உறவாடுகிற அவருடைய சிந்தையை அறிந்து கொள்கிற, அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிற ஒரு மகா உன்னதமான ஒரு பலிபீடம். ஜெபம் என்பது பேச்சில் அல்ல . அது முழங்காலில் சாதிக்கவேண்டிய இடம்
ஜெபத்தில் நாம் எப்பொழுதும் ஒரு போர் வீரனாக காணப்பட வேண்டும். *யாக்கோபு மிகப்பெரிய ஒரு போராளி. அது போல் நாமும் கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து தடைபட்டு போன ஆசீர்வாதங்களை போராடி பெற்றுக்கொள்ள கர்த்தர் நமக்கு கிருபை செய்வாராக . இறுதி வெற்றி நமக்கே.