கடவுள் யோசுவாவுக்கு கொடுத்த மூன்று பொறுப்புகள்
உங்கள் சிந்தனைக்கு:.
மோசே மரித்த பிறகு லட்சக்கணக்கான யூத ஜனங்களை கானானுக்குள் அழைத்துச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பை தேவன் யோசுவாவுக்கு அளித்தார்.
எகிப்திலிருந்து புறப்பட்ட யூத ஜனங்களில் மீதம் இருப்பவர்கள் யோசுவாவும் காலேபும் மட்டும்தான். மோசே பெரிய தலைவர் .
ஆனால் யோசுவா தலைவர் என்கிற நிலையில் இல்லாமல் ஒரு படைத்தளபதி என்ற நிலையில் காணப்பட்டார்.
மோசேயுடன் காணப்பட்ட மிகப்பெரிய தலைமைத்துவம் யோசுவாவிடம் காணப்படாவிட்டாலும், தேவன் அந்த பொறுப்பை அவனுக்கு அளித்தார்.
யோசுவாவுக்கு முன்பாக ஒரு மிகப்பெரிய மூன்று பொறுப்புக்கள் காணப்பட்டது.
1. தன் ஜனங்களை கானானுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும்.
2. கானானுக்குள் குடியிருந்த புற இனமக்களை வெளியேற்ற வேண்டும்
3. கைப்பற்றப்பட்ட கானான் தேசத்தை 12 கோத்திரங்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
இந்த மிகப்பெரிய மூன்று பொறுப்புகளும் யோசுவாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்ற அவனுக்கு தேவன்கொடுத்த மூன்று காரியங்கள்.
1. தேவன் கொடுத்த வாக்குறுதிகள்1:3,5,6
2. தேவனுடைய வார்த்தைகள்(7,8)
3. தெய்வீக வழிநடத்தல்(9)
இதன் அடிப்படையில் தான் யோசுவா புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் மூன்று முறை
"பலங்கொண்டு திடமனதாயிரு."
என்று யோசுவாவிடம் சொல்லி அவனை திடப்படுத்துகிறார்.(6,7,9).
ஒரு மனிதனுக்கு ஒரு பொறுப்பை வழங்கும் போது அதை நிறைவேற்ற அவனுக்கு தேவையான அனைத்து கிருபைகளையும் அளிப்பார் நாம் எப்படி இருக்கிறோம் என்பதனால் அல்ல அவர் எப்படியாக காணப்படுகிறார் என்பதின் மூலமே நமக்கு ஊழியத்தின் வெற்றி கிடைக்கும்.
Not what we are but what He is. Not not be feel but His facts.T.Austin Sparks.
யோசுவாவுக்கு மூன்று பெரிய பொறுப்புகளை நிறைவேற்ற மூன்று ஆசிர்வாதங்களை கொடுத்து, மூன்று முறை கடவுள் அவரை தைரியப்படுத்தினார்.
சிறிய ஊழியமோ பெரிய ஊழியமோ தேவன் நமக்கு அதை கொடுக்கும் பொழுது அதை நிறைவேற்றுவதற்கு ஏதுவான வாக்குறுதிகளையும், தேவனுடைய வார்த்தைகளையும், தேவனுடைய வழி நடத்துதுதலையும் நிச்சயமாக தருவார். யோசுவாவின் தேவன் நமது தேவன்.
எசேக்கியேல் சண்முகவேல்