உங்களுடைய ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று கலங்காதீர்கள்
உங்கள் சிந்தனைக்கு:
உங்களுடைய ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று கலங்காதீர்கள்
கீழ்கண்ட யோசுவாவின் வார்த்தைகளை கவனித்து பாருங்கள்.
இந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட காலம் என்பது மோசே இறந்த பிறகு இஸ்ரவேல் மக்களை கானானுக்கு அழைத்து செல்லும் பொறுப்பை தேவன் யோசுவாவுக்கு அளித்த அந்த காலகட்டம்.
.உங்கள் தேவனாகிய கர்த்தர் இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்
யோசுவா 1:13
மற்றும் 1;15 ஐயமும் பார்க்க வேண்டும்
இந்த வார்த்தைகளை புதிய தலைமுறை யூத ஜனங்கள் நம்பினார்கள்.
ஆனால் இதே அர்த்தமுள்ள வார்த்தைகளைத்தான் யோசுவாவும் காலேபும் 38 ஆண்டுகளுக்கு முன்பாக காதேஸ் பர்னேயா என்கிற இடத்தில் சொன்னார்கள்.
எண்14:8
கானான் தேசத்தை வேவு பார்க்க அனுப்பப்பட்ட 12 நபர்களில் இவர்கள் இரண்டு பேர் மட்டும்தான் இந்த விசுவாச வார்த்தைகளை அன்றைக்கு கூறினார்கள்.
அந்த காலகட்டத்தில் இவர்கள் சொன்ன வார்த்தைகளை இஸ்ரவேல் ஜனங்கள் நம்பி இருந்தால் அவர்கள் 38 ஆண்டுகளுக்கு முன்பாகவே தேவன் வாக்குறுதி கொடுத்த கானானுக்குள் சென்றிருப்பார்கள்.
ஆனால் அப்பொழுது யூதர்கள் இவர்கள்சொன்ன வார்த்தையை நம்பவில்லை.
பத்து நபர்கள் சொன்ன தவறானஅறிக்கையை நம்பினார்கள்.
விளைவு லட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்கள் மடிந்து போனார்கள்.
தேவன் கொடுக்க தயாராக இருந்த கானானை பெற்றுக் கொள்ள முடியவில்லை
.
அதுபோல்தான் நாம் சொல்லும் சில நல்ல ஆலோசனைகளை, ஆவிக்குரிய போதனைகளை அநேகர் நம்ப மாட்டார்கள்.
ஆனால் காலம் வரும் பொழுது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இழப்புகள், மரணங்கள், நஷ்டங்கள் அடையும் பொழுது அதை நம்புவார்கள், நாம் சொல்லும் ஆலோசனைகளை நம்முடைய தோற்றத்தை பார்த்து, பொருளாதார நிலையை பார்த்து ,நம்முடைய எளிமையை பார்த்து நம்ப மாட்டார்கள்.
ஆனால் அதனால் வருகின்ற விளைவுகளை அனுபவிக்கும் போது அதை குறித்து வருத்தப்படுவார்கள்.
But it's too late..
ஏழை சொல் சபை ஏறாது என்பார்கள்.
அது உலகத்திற்கு பொருத்தமாக இருக்கலாம். ஆவிக்குரிய காரியத்தில் அப்படி இருக்கக் கூடாது. ஒருவர் கூறும் ஆலோசனைகளை அவருடைய வயதின் அடிப்படையிலோ சமுதாய அந்தஸ்தின் அடிப்படையிலோ அதன் தரத்தை முடிவு செய்யக்கூடாது.
38 ஆண்டுகளுக்கு முன்பு காலேபும் யோசுவாவும் 12 நபர்களில் இருவர் அவ்வளவுதான்.
ஆனால் இன்று யோசுவா கானானை கைப்பற்றி அவர்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு தளபதி ஒரு தலைவன்.
அது தவிர அவர்கள் முன்னோர்களின் தோல்விகள் . இவைகளின் அனைத்து காரியங்களின் நிமித்தமாக
அவர்கள் அதை ஏற்றுகொண்டார்கள்.
நாமும் கூட நம்முடைய ஆலோசனைகளை மற்றவர்கள் கேட்கவில்லை என்று கலங்க வேண்டாம்.
நேரமும் ,காலமும் வரும்போது அவைகளை கவனிக்க கூடிய நேரம் வரும்.
நாமும் சரியான ஆவிக்குரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் அவர்கள் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவர்களுடைய உரிமை.
நம்முடைய கடமையை நாம் செய்ய தவறக் கூடாது.