நமது இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுவோம்.
உங்கள் சிந்தனைக்கு!
மறுபடியும் பிறந்தஎல்லோருடைய வாழ்க்கையிலும் இரட்சிப்பின் அனுபவம் மிக முக்கியமான நிகழ்வாகும். நாம் இயேசுவை பின்பற்ற நாம் எடுத்த அந்த தீர்மானம் நம்பமுடியாத விளைவுகளை நாம் வாழ்வில் ஏற்படுத்தியிருப்பதை நாம் அறியாமல் இருப்பதுதான் மிக பெரிய பரிதாபம். நாம் மறுபடியும் பிறக்கும் அந்த நாளில் ஆண்டவர் செய்யும் விவரிக்க முடியாத செயல்களை இப்போது தியானிக்கலாம்.
1.நம் பாவங்களை மன்னித்து நம்மை குற்றமில்லாதவராக அறிவிப்பதோடு ஆண்டவர் தமது நீதியை நமக்கு அளித்து நம்மை அவருடைய பிள்ளைகளாக்கி நம்மை அவருக்கு சொந்தமாக்கினார்(யோவான் 1:12, ரோமன் 5:1,1 கொரி 6:20)
2.நாம்
இயேசுவுக்குள் பூரணமாயிருக்கிறோம்(1கொலோ 2:20)
3.நாம் தேவனோடு நேரடியாக உறவாடக்கூடிய உரிமையை அளித்திருக்கிறார்(.எபே2:18)
4.நாம் தேவனுடைய ஆசாரியராக நியமிக்கப்பட்டிருக்கிறோம் (1 2:5)
5.நாம் இருளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று பரலோக இராச்சியத்தின் குடிமக்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். (பிலி3:20)
6.அவர் நம்மை உன்னதங்களில் இயேசுவோடுகூட உட்கார வைத்திருக்கிறார்.
இப்படி சொல்லிகொண்டே போகலாம்.
இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் ஓர் நொடிப்பொழுதில் நமக்கு வந்து சேருகிறது, ஒரே வினாடியில் நம் நிலை, நம் உயர்வு, நம் ஆசிர்வாதம், நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவில் உயர்த்தப்படுகிறது.
தேவனுடைய பிள்ளை என்ற அதிகாரத்தோடு நாம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட நிலைக்கு (fully protected) நம்மை தேவன் உயர்த்துகிறார்.
எனவே அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நமது இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுவோம்.
எசேக்கியேல் சண்முகவேல்