Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றினா போக்கை மாற்றிய ராகப்.
உங்கள் சிந்தனைக்கு:
இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றினா போக்கை மாற்றிய ராகப்.

இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் திடீரென ராகப் காணப்படுகிறாள்.
ராகாப் யூத பெண்மணி அல்ல. கலப்படமில்லாத இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் முதல்முறையாக புறயின பெண் ராகாப் இணைக்கபடுகிறாள்.
இவள் ஒரு தன் உடம்பை விலை பேசி வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்மணி.

இவளைப் பற்றி புதிய ஏற்பாட்டில் எபிரேய நிருபத்தை எழுதிய ஆசிரியரும், யாக்கோபும் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடுகிறார்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் விசுவாச வீரர்கள் பட்டியலில் இரண்டு பெண்களை பற்றி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் புற இனத்தைச் சார்ந்த வேசியான ராகாபும் ஒன்று.
மற்றொன்று பரிசுத்தமாக வாழ்ந்த சாராள்.

யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் விசுவாசத்தோடும் நம்முடைய கிரியையும் அவசியம் என்று சொல்லும் பொழுது ஆபிரகாமோடு ராகாபை ஒப்பிட்டு யாக்கோபோடு சொல்கிறார்..
அந்த அளவுக்கு ராகாப் கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இணைக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது. இரண்டு ஒற்றர்களுக்கு ராகாப் அளித்த உதவிக்காக அவளும் அவளுடைய குடும்பமும் காப்பாற்றப்பட்டது ஒரு மிகப்பெரிய காரியம்.

ஆனால் இறைவன் தன்னுடைய அநாதி தீர்மானத்தின் படி, திட்டத்தின் படி, மிகப் பெரிய நோக்கத்தின் அடிப்படையில் அவளை தன் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய சந்ததியில் இணைத்தது என்பது ஒரு மிகப்பெரிய செயல்.
இந்த செயல்
பின்நாட்களில் இயேசு கிறிஸ்து பாவிகளின் நண்பனாக பாவிகள் இரட்சிக்க இந்த உலகத்திற்கு வரப்போகிறார் என்பதை உலகத்திற்கு முதல் முதலாக முன்னறிவித்தது இந்த நிகழ்வு.
அந்தக் காலத்தில் விபச்சார தொழில் என்பது யூதர்கள் மத்தியில் மிகவும் வெறுக்கத்தக்க காரியம். இந்தத் தொழிலில் ஈடுபட்ட பெண்மணியை தேவகுமாரனுடைய வம்ச வரலாற்றில் இணைத்தது என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியாத தேவனுடைய திட்டம் .

ராகாவைப் பற்றிய
இது போன்ற பல பதிவுகளை பின்னால் பார்க்கலாம்.

தியானிக்க மத்1:5,எபி11:31,யாக்2:25 மற்றும் யோசுவாவின் புத்தகம் இரண்டாவது அதிகாரம்.
எசேக்கியேல் சண்முகவேல்