Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Daily Quote for Study

பிரசங்க பீடமும் தேவ பயமும்.
உங்கள் சிந்தனைக்கு !

பிரசங்க பீடமும் தேவ பயமும்.

பிரசங்க பீடம் என்பது தேவ ஊழியன் தேவனிடத்திலிருந்து பெற்ற வார்த்தைகளை தேவமக்களோடு பகிர்ந்து கொள்ளும் இடம்.
பவுல் சொல்வதுபோல "தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிற இடம் "2 கொரி 2;17

இந்த இடத்தில் தேவன் மட்டுமே மகிமை பெறவேண்டும். .
தனி நபர் வழிபாடு, சம்பிரதாய புகழ்ச்சிகள், வீண் அரட்டைகள் ,கிண்டல் கேலிகள் நக்கல்கள் களியாட்டங்கள்நடனங்கள் போன்றவைகளுக்கு இடமில்லை.

அது பக்தி விருத்திக்கும் தேவனின் எச்சரிப்பின் செய்திக்கும் உரிய இடம் .சமாதானத்தின் சுவிஷேசம் அறிவிக்கப்படும் இடம் .
தேவனின் கரத்தை அசைக்கும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படும் இடம்.
பிரசங்க பீடத்தை பற்றிய புரிதல் பிரசங்கிமார்களுக்கு மிக மிக அவசியம்.
பிரசங்கபீடத்தின் சிறப்பை கெடுக்க வேண்டாம்.