1 நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம். வேத பாடம் 11
*உங்கள் சிந்தனைக்கு*
1 *நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்*
*வேத பாடம் 11*
*தியானிக்க வேண்டிய* *வேத* *பகுதி 17வது* *அதிகாரம்*
இந்த அதிகாரம் மிகவும் முக்கியமான ஒரு அதிகாரம்.
அதிகாரத்தில் உள்ள நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம்.
1 *முதல் 4 வரை* *உள்ள வசனங்கள்.*
இந்தப் பகுதியில் தாவீது தேவனுடைய உடன்படிக்கை பெட்டி கூடாரத்தில் அதாவது திரைகளின் கீழ் இருப்பதை அறிந்து ஒரு ஆலயம் கட்டி அந்த உடன்படிக்கை பெட்டியை அங்கே வைக்க விரும்பினான்.
இந்த விருப்பத்தைத் தீர்க்கதரிசி நாத்தானிடம் சொன்னபோது அவனும் தாவீது ஆலோசனைக்கு எதிர்ப்பு சொல்லாமல் தாவீதின் விருப்பத்தை ஆமோதித்தார்.
நாத்தானுடைய இந்தச் சம்மதம் தேவனுக்கு பிரியம் இல்லாத ஒன்று.
It was a hasty approval.
உடனே கடவுள் தலையிட்டு நாத்தானிடம் தாவீது தனக்கு ஆலயம் கட்ட வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
இது உணர்த்தும் பாடம் என்ன?
தாவீதின் விருப்பம் நேர்மையான விருப்பம்.
நாத்தானும் கடவுளுடைய தீர்க்கதரிசி.
எனவே தாவீதின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நாத்தான் அனுமதித்தான். இந்தத் தீர்க்கதரிசியினுடைய அனுமதி தேவனுடைய அனுமதி அல்ல.
தேவனுடைய பார்வை என்பது வேறு.
சில நேரங்களில் நம்முடைய நல்ல செயல்களைத் தேவனுடைய ஊழியர்கள் அங்கீகரிப்பார்கள்.
காரியம் நல்லதாக இருக்கலாம். ஆனால் அவைகள்
கடவுளுடைய அனுமதியோடு தேவனுடைய சித்தத்தோடு இணைந்து காணப்படுகிறதா என்பதை உணராமல் மனித விருப்பங்களை அங்கீகரித்து விடுகிறார்கள்.
எனவே பெரிய ஊழியக்காரர்களின் அங்கீகாரங்கள் எல்லாம் தேவனுடைய அங்கீகாரங்களாகச் சில நேரங்களில் இருப்பதில்லை.
எனவே கடவுள் அன்று இரவே தீர்க்கதரிசியோடு பேசித் தன்னுடைய கட்டளையை வெளிப்படுத்தினார். தாவீது ஆலயத்தைக் கட்ட வேண்டாம் என்று கட்டளையிட்டார்
கடவுளுடைய அரசாங்கத்தின் திட்டங்களை, செயல்பாடுகளை எவ்வளவு பெரிய ஊழியக்காரனும் முழுமையாக அறிய முடியாது.
எதைக் கொண்டு யாரைக் கொண்டு எப்பொழுது நிறைவேற்ற வேண்டும் என்பது அவருடைய இறையாண்மையை சார்ந்தது.
இதை மனிதன் யூகிக்க முடியாது.
அது அவனுடைய வேலையும் அல்ல.
தேவனுடைய ஆலயம் கட்டுவது என்பது தேவனுடைய மிகப்பெரிய நோக்கத்தில் ஒன்று.
தாவீதின் பணி என்பது வேறு.
சாலமோனுடைய பணி என்பது வேறு. இருவரையும் கடவுள் வெவ்வேறு நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார். ஒருவர் இடத்தை மற்றொருவர் பிடிக்க முடியாது.
தாவீதும் அதை உணர்ந்து உடனடியாகக் கீழ்ப்படிந்து தேவனின் திட்டத்தை நிறைவேற்றினான்.
தாவீதைப் பொறுத்த அளவில் இது ஒரு நிறைவேறாத ஆசை.
ஆனால் அந்த நிறைவேறாத ஆசையில் அவனைக் குறித்த தேவனுடைய சித்தம் நிறைவேறியது.
அதனால் தான் வேதம் இப்படி அவனைப் பற்றிக் கூறுகிறது.
"தாவீது தன் காலத்தில் தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்த பின்பு நித்திரையடைநதான்.
*(அப்போஸ்தலர் 13:36)*
நம்முடைய வாழ் நாட்களில் நமது பிரதான நோக்கம், தேவன் நம்மை இந்த உலகத்தில் தெரிந்து கொண்ட நோக்கத்தை அறிந்து அதை நிறைவேற்றுவது தான்.
தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் இருக்கிற பாதுகாப்பு ,ஊழியத்தின் வெற்றி வேறு எந்தக் காரியத்திலும் கிடையாது என்பதை நாம் உணர்ந்து கொண்டால் நல்லது.