ஆலயமும் ஆசாரியத்துவமும்.
உங்கள் சிந்தனைக்கு:
ஆலயமும் ஆசாரியத்துவமும்.
யூதர்கள் ஆசாரியர்களையும் லேவியர்கள் தங்கள் ஆசாரியத்துவத்தையும்
இழந்து விட்டார்கள்.
காரணம் அவர்களுடைய தேவாலயம் இடிக்கப்பட்டுவிட்டது.
ஆலயம் இருந்தால் தான் ஆசாரியத்துவம் இருக்கும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
அதுபோல
நாமும் ஆலயமாக தேவனுடைய பார்வையில் காணப்படும் வரையில்தான் மற்றவர்களுக்கு லேவியராக, ஆசாரியராக வாழ முடியும்.
என்றைக்கு "நாம் தேவனுடைய ஆலயம்" என்கிற நிலையை இழந்து விடுகிறோமோ அன்றைக்கு நாம் உலகிற்கு ஆசாரியர்களாக வாழ தகுதியற்றவர்களாக மாறிவிடுகிறோம்.
பழைய ஏற்பாட்டில் தேவனுடைய மகிமை இஸ்ரவேலை விட்டு கடந்து போனதற்கு ஆசாரியர்கள் தேவன் கொடுத்த பாதையை விட்டு விலகிப் போனதே காரணம்.புலம் 4:13
இன்றைக்கும் சபை தன் மகிமையை இழந்து புறஜாதிகளால் நிந்திக்கப்படும் நிலைமைக்கு சென்றதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறையே.
ஆவிக்குரிய போர்வையில்உலகத்தை
மிஞ்சும் ஆடம்பரமான வாழ்க்கை, சுயநலம் போன்றவைகள் நம்முடைய ஆலயத்தை கெடுத்து விடுகிறது .
சுடர்விடும் நட்சத்திரங்களைப் போல வாழ வேண்டிய நாம் இக்கபோத்துகளாக (தேவ மகிமை இழந்தவர்களாக) மாறிவிட்டோம்.
எனவே புதிய ஏற்பாட்டு ஆசாரியர்களாகிய நாம் நம்முடைய ஆலயத்தை எப்பொழுதும் தேவன் தங்கும் வீடாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் தேவன் நமக்கு கொடுத்த மிகச் சிறந்தஆசாரியத்துவ பட்டத்தை ஒருபோதும் இழந்து விடக்கூடாது.